Flash News
செய்திகள்
சமஸ்டி, வட,கிழக்கு இணைப்பு இன்றிய தீர்வை ஏற்க வேண்டாம்:சம்பந்தனிடம் வலியுறுத்து
[ Friday,6 January 2017, 15:55:07 ]   

சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் இன்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளன.


2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.  

எனினும், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது உறுதிமொழிக்கு அமைய கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.  

இதன்படி, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும் என தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடலை நடத்த இணக்கம் வெளியிட்டார்.

இதற்கமைய இந்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. 

இன்று மாலை 4.50 அளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் சுமார் மூன்றரை மணிநேரம் நீடித்தது.

கலந்துரையாலின் இடையே கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் கலந்துரையாடலில் இருந்து எழுந்துச் சென்றார். 

இந்த நிலையில் இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டம் இல்லாத எந்தவொரு தீர்வையும் அரசாங்கம் வழங்கினால் அதனை நிராகரிக்கும்படி இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு இணைப்பானது மிகவும் கடினமானதாகும் என்பதோடு அதற்கு முஸ்லிம் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழரசுக் கட்சி சார்பில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதோடு, மக்களின் ஆணையை மீறியும், மக்களுக்கு தேர்தல் காலத்தில் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழியையும் மீறி செயற்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு செய்வதாயின் அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடாகவே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நிலைப்பாடாக இருக்கக்கூடாது என்பதையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் இரா. சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளனர்.


செய்தி சேவை
கிளிநொச்சி திருவையாற்றில் முன்னாள் போராளி ஒருவர் கைது
[ Friday,6 January 2017, 15:55:07 ]
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்தி, குறித்த இளைஞரை
மேலும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ; டெனிஸ்வரன்
[ Friday,6 January 2017, 15:55:07 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிக
மேலும்...
27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்
[ Friday,6 January 2017, 15:55:07 ]
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய தையிட்டி பிரதேசத்திலும் காங்கேசன்
மேலும்...
ஐ.பி.சி இசை நாளை முதல்
[ Friday,6 January 2017, 15:55:07 ]
உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ள நிலையில், ஐ.பி.சி தமிழ் உலகத் தமிழர்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்...
ஊரணி பிரதேசம் மக்கள் பாவனைக்காக நாளை கையளிப்பு
[ Friday,6 January 2017, 15:55:07 ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. வலிகாமம்.வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர்
மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
[ Friday,6 January 2017, 15:55:07 ]
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016