Flash News
செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக பிரேரணை?
[ Saturday,7 January 2017, 05:23:03 ]   

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்வில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு சென்னையின் பிரபல சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்துறை அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

 

ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பின் 6ஆம் திருத்தத்திற்கு அமைய மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 18 மற்றும் 19ஆம் உறுப்புரைகள் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இதற்கு எதிராக பிரேரணையை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை மறுதினம் கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பிரேரணை தொடர்பிலான பணிகளை அமெரிக்காவின் முன்னாள் சட்ட மாஅதிபர் ராம்ஸே கிளார்க், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தருமாறு ஸ்ரீலங்கா மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி சேவை
சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை; அடுத்தமாதம் தீர்ப்பை அறிவிக்கும் நீதிமன்றம்
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
வன்னி இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை
மேலும்...
புறக்கோட்டை குண்டுத் தாக்குதல் : குற்றவாளிக்கு 20 வருட சிறை
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு 20 வருட கடுழீய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்...
ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கான அடிப்படை சம்பள அறிவிப்பு விரைவில்
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்
மேலும்...
போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோட்டா
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது
மேலும்...
புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும்...
இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்த போவதில்லை
[ Saturday,7 January 2017, 05:23:03 ]
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017