Flash News
செய்திகள்
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகள் போராட்டம்
[ Sunday,8 January 2017, 11:37:38 ]   

சம்பள உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமக்கான சம்பள உயர்வு, வீட்டு வசதி, போன்ற காரணங்களுக்காக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அத்துடன் ஐவரி கோஸ்டில் முன்னாள் கிளர்ச்சிக் குழுவிலிருந்து இராணுவத்தில் இணைந்தவர்களும் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


எனினும், இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் நாட்டின் முக்கிய நகரமான புவாக்கே நகரில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கை போராட்டக்காரரகள் கைப்பற்றியுள்ளனர்.

 

அத்துடன், அங்கிருந்த சிறியரக ஏவுகணைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளையும் கொண்டு சென்றுள்ளனர்.

 

புவாக்கேவில் மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான வீதிகளில் ஏவுகனைகளை வீசியும், அரசு அலுவலகங்களுக்கு முன்னால் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

ஐவரி கோஸ்ட்டின் பொருளாதார தலைநகரமான அபிட்ஜான் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இராணுவ வீரர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் அங்கு பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வீரர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்காக ஐவரி கோஸ்டின் இராணுவ அமைச்சர் அலைன் ரிச்சர்ட் டன்வாஹி புவாக்கோ நகருக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

 

அங்குள்ள இராணுவ தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அவர் காத்திருந்தபோது உள்ளே நுழைந்த இராணுவ வீரர்கள் அமைச்சர் மற்றும் உடனிருந்த அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

 

எனினும் 2 மணித்தியாலங்களுக்கு பின் அமைச்சரை விடுவித்திருந்தனர், இராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.செய்தி சேவை
நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலி அறிமுகம்
[ Sunday,8 January 2017, 11:37:38 ]
ரீ வோக் எந்திரவியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மிற் கோபர், தன்னுடைய முன்மாதிரியான கண்டுபிடிப்பான நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலியை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும்...
சீன உயரதிகாரியின் விஜயத்தை அடுத்து கொங்ஹொங்கில் பாதுகாப்பு தீவிரம்
[ Sunday,8 January 2017, 11:37:38 ]
கொங்ஹொங்கில் என்றுமில்லாவாறு பாரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்...
குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் - டில்மா ரூசெப்
[ Sunday,8 January 2017, 11:37:38 ]
தம்மை பதவிநீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாக பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்ட கணக்குகளில் மாற்றங்களைச் செய்ததாக டில்மா ரூசெப்பிற்கு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016