Flash News
செய்திகள்
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Monday,9 January 2017, 14:07:48 ]   

லண்டன் நிலக்கீழ் தொடரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மில்லியன்கணக்கான பயணிகள் இன்றுகாலை  பெரும் அவஸ்தைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றுமாலை ஆறுமணிக்கு ஆரம்பமான இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று மாலை ஆறுமணியுடன் முடிவுக்கு வருகின்றபோதிலும், நிலக்கீழ் பேரூந்து பயணிகள் நெருக்கடி சீரடைய பல மணித்தியாலங்கள் பிடிக்கலாம் என லண்டன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பணிப்புறக்கணிப்பினை லண்டன் மேயர் சாதிக் கான் ஒரு அவசியமற்ற நடவடிக்கை எனக் கண்டித்துள்ளார்.

லண்டனில் நாளொன்றிற்கு சுமார் 4.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் லண்டனின் மிக முக்கிய பயணச் சேவையான நிலக்கீழ் தொடரூந்து ஊழிகள் அரசாங்கம் தொடரூந்து பயணச்சீட்டு விநியோக அலுவலகங்களை மூட எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்புத் தெரிவித்து இந்த ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்றுமாலை குதித்தனர்.

லண்டன் பூராவுமுள்ள சுமார் 270 நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களில் 100 நிலையங்கள் இன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த அலுவலகங்களை மூடுவதனால் பலநூற்றுக் கணக்கான பணியாளர் வேலையிழக்க நேரிடும் என்பதனால் அதனை நிறுத்தும்படி ஊழியர்கள் கோரிவருகிறார்கள்.  

நிலக்கீழ் பேரூந்து நிலையங்களில் பணிபுரிவதற்கு மேலதிக ஊழியர்கள் தேவை என்பதனை ஏற்றுக்கொண்டுள்ள லண்டன் போக்குவரத்து திணைக்களம், மேலதிகமாக 200 ஊழியர்களை புதிதாகச் சேர்த்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ள போதிலும், ஊழியர் சங்கம் இந்த எண்ணிக்கை அளவில் மிகக் குறைந்ததே என்று கண்டித்துவருகிறார்கள்.  

இறுதி நேரம் வரை இந்தப் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையினை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது போகவே, இந்தப் பணிப்பகிஷ்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இன்று காலை பெருமளவான பயணிகள் பெருமளவு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மேலதிகமாக 100 பேரூந்துகள் இன்று விசேட சேவைக்காக அமர்த்தியுள்ளபோதிலும் பயணிகள் முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு அது தீர்வாக அமையவில்லை.

லண்டன் நிலக்கீழ் பேரூந்து ஸோன் 1 பகுதிக்குள் அமைந்துள்ள பெருமளவான ரயில் நிலையங்கள் இந்தப் பகிஷ்கரிப்பினால் மூடப்பட்டுள்ளது. இதனால் இதனூடாக ரயில் தொடர்வலையமைப்பின் ஏனைய பகுதிச் சேவைகளும் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன. குறிப்பாக எப்போதுமே பயணிகளினால் நிறைந்துவழியும் விக்டோரியா, கிங்ஸ் குறொஸ், வோட்டர்லூ, படிங்டன், யூஸ்டன், பாங் மற்றும் லண்டன் பிரிஜ் போன்ற முக்கிய நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் மூடிக்கிடப்பதனால் இவற்றின் முன்பாக பயணிகள் பேரூந்துகளுக்காக சாரை சாரையாகக் குவிந்திருந்தனர்.

விக்டோரியா, சேர்க்கிள் மற்றூம் வோட்டர்லூ அண்ட் சிற்றி லைன் போன்ற நிலக்கீழ் தொடரூந்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள போதிலும், ஏனைய சேவைகள் பகுதியளவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான சேவையினை அவர்களுக்கு வழங்க முடியாத ஒருநிலை காணப்படுவதாகப் பயணிகள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, நாளைய தினம் சதேர்ண் ரயில் சேவை சாரதிகள் நாளையும், புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.

 

செய்தி சேவை
ட்ரம்பை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
[ Monday,9 January 2017, 14:07:48 ]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்பை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
மொன்டிநீக்ரோ பிரதமரை கொலை செய்யும் முயற்சி : ரஷ்யா மீது சந்தேகம்
[ Monday,9 January 2017, 14:07:48 ]
மொன்டிநீக்ரோவின் மேற்குலக ஆதரவு பிரதமர் கொலை செய்யும் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.எதிர்கட்சியை பதவியில் அமர்த்தும் வகையில் பிரதமர் மிலோ
மேலும்...
வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பு
[ Monday,9 January 2017, 14:07:48 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியா தீர்மானத்ததை அடுத்து வெறுப்புணர்வு குற்றங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான சர்வஜென
மேலும்...
அட்லாண்டிக் சமுத்திரத்தில் நிர்க்கதிக்குள்ளான 14 பேர் மீட்பு
[ Monday,9 January 2017, 14:07:48 ]
அட்லாண்டிக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான பந்தய படகில் பயணித்த 14 பந்தய படகு செலுத்தும் வீரர்களை பிரித்தானிய கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.புயல்காரணமாக சேதமடைந்த க்ளைட் சலஞ்ஜர்
மேலும்...
பிரித்தானியாவில் சட்டவிரோதமான IPTV விற்பனை செய்த ஐவர் கைது
[ Monday,9 January 2017, 14:07:48 ]
பிரித்தானியாவில் கொடி டீ.வி செட்-டொப் பெட்டி எனப்படும் இணையவழியாக தொலைக்காட்சி அலைவரிசைகளை திருட்டுத்தனமாக
மேலும்...
மகாராணியின் 65 ஆவது வருட பூர்த்தயை கௌரவிக்கும் முகமாக நிகழ்வுகள் லண்டனில்
[ Monday,9 January 2017, 14:07:48 ]
பிரித்தானிய மகாராணி எலிசபெத் 65 வருடங்கள் தொடர்ந்து அரியணையில் இருப்பதை கௌரவிக்கும் வகையில் துப்பாக்கி வேட்டுக்கள், முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017