Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Tuesday,10 January 2017, 13:21:54 ]   

பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் நாளை வெப்பநிலை குறைவடையும் எனவும் கடும் குளிரான காலநிலை நிலவும் எனவும் அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.


அத்துடன், இந்த வார இறுதியில், கடும் மழை பெய்யக்கூடும் எனவும் எனினும் அதுதொடர்பில் தற்போது உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதேவேளை, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் பல பாகங்களுக்கு குளிர் காலநிலையினால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை ஆய்வாளர்கள், இந்த வார இறுதியில் பிரித்தானியாவின் பல பாகங்களில் கடும் பனிபொழிவை காணக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


வடக்கு ஸ்கொட்லாந்து, வடமேற்கு இங்கிலாந்து, வடக்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.