Flash News
செய்திகள்
அன்று நான் கூறியதையே இன்று ரணில் கூறுகின்றார்; ஏற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சி
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]   

தான் ஜனாதிபதியாக இருந்தபோது தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்த அரசியல் யாப்பு யோசனையை நிராகரித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது அதேபோன்றதொரு யாப்பினை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


உயர்கல்வி ஊடான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான செயற்றிட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று கொழம்பில் இடம்பெற்றது. இதன்போது எமது ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது சிறந்த தீர்வு திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும், எனினும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைக்குத் தீர்வினை அவரால் முன்வைக்க முடியுமா? என எமது ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்

 

இதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க “இதுதான் சகோதரரே மனிதர்களின் சுபாவம். அன்று வேண்டாமென நிராகரித்த யாப்பினையே தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டுவர முயற்சிக்கின்றார். அன்று எங்களுடைய கட்சி மீண்டும் வெற்றிபெரும் என்ற சந்தேகத்திலேயே ரணில் அதனை நிராகரித்தார். நான் தொடர்ந்து ஜனாதிபதியாகவே இருப்பேன் என்ற அச்சத்திலேயே அவர் அதனை நிராகரித்தார். 


இன்று அவரை பிரதமராக்கவும், ஒருவரை ஜனாதிபதியாக்கவும் உதவி செய்தோம். அன்று நான் கூறியதை இன்று அவர்கள் கூறுகின்றார்கள். இந்த இடைப்பட்ட 20 வருடத்தில் நாடு அழிவடைந்துள்ளது. எனினும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பலர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தற்போதைய சூழ்நிலையிலேனும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.“ என்றார்


இதேவேளை, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதாக கூறியுள்ளீர்கள் எனினும் பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக கருத்துக்கள் வெளியாகின்றனவே? என எமது ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க“பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளே சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் இனவாதத்தை தூண்டிவிட்டன. இன்று அந்த பணியை பௌத்த தேரர்களும் ஆரம்பித்துள்ளனர். அரசியல்வாதிகள் தங்களது வாக்குகளை இலக்காகக் கொண்டு அந்த பணிகளை செய்கின்றனர். அவ்வாறான ஒரு வேலையை செய்யாத ஒரேயொரு அரசியல்வாதி நான் என்பதில் பெருமைக்கொள்கின்றேன். 


அதனைவிடவும் தற்போதைய ஜனாதிபதியும் அவ்வாறு செயற்படுவதில்லை. அவருக்கு ஆதரவு தந்தமைக்கும் இதுவும் ஒரு காரணம். இந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் நாட்டில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.“ எனக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில் நல்லிணக்க பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் நிராகரித்தமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்

 

இதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க “அதை நான் பிழை என்றே கூறுவேன், இந்த குழுவை நியமித்த அரசாங்கம் அந்த குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி  ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் யுத்த குற்ற விசாரணை குறித்த நீதி பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லையென கூறியுள்ளார்கள். 


இந்த குழு சர்வதேச அவதானிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பில் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பேசி தீர்மானிக்க முடியும்.“ எனத் தெரிவித்தார்.

செய்தி சேவை
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரண்டாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
ஸ்ரீலங்கா படையினர் குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை குறைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
மேலும்...
வடக்கில் புத்தர் சிலை உடைப்பு; தென்னிலங்கை கும்பலொன்றே மேற்கொண்டது
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதன் பின்னணியில் யெற்படும் சூத்தரதாரிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
மேலும்...
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்
மேலும்...
பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் ஜெனீவாவில் ஸ்ரீலங்கா மீது கடும் கேள்விக்கணை
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசு, பாலியல் வன்கொடுமைகள் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இராணுவ மயமாக்கல் தொடர்பில் கடுமையான கேள்விகளுக்கு முகம்கொடுத்துள்ளது.
மேலும்...
யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்
[ Tuesday,10 January 2017, 14:38:43 ]
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017