Flash News
செய்திகள்
ஸ்ரீலங்காவிற்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிபந்தனையுடன் வழங்க தீர்மானம்
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]   

ஸ்ரீலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச் சலுகையை மீளவும் ஸ்ரீலங்காவிற்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் இன்று தீர்மானித்திருக்கிறது. 

ஆனாலும், இந்த வரிச்சலுகையினைப் பெறுவதற்கு மனித உரிமை, தொழிலாளர் உரிமை மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சிறிலங்கா ஏற்றுக்கொண்டு, முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகக் கைச்சாத்திடவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

 ஐரோப்பிய கமிஷனினால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வருவதற்கு நான்கு மாதங்கள் உள்ளன என்றும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக காத்திரமான கருத்துக்கள், பரிந்துரைகள் இருந்தால் அவற்றினை முன்வைப்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய கவுன்சிலும் இந்த நான்கு மாதங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்காவில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற அப்போதைய ஜனாதிபதி மஹி்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிராகரித்து வந்ததை அடுத்து ஸ்ரீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரத்து செய்தது.

இதன் காரணமாக ஸ்ரீலங்காவின் பிரதான வெளிநாட்டு வருமான மார்க்கமாக இருந்த தைத்த ஆடை ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்ததுடன், தைத்த ஆடைத்  தொழிற்சாலைகள் பல மூடப்பட்டும் உள்ளன

எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து ஏற்படுத்தப்பட்ட மைத்ரிரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதனை அடுத்து இரத்துச்செய்யப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்காவை மீட்டெடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும் பகீரதப் பிரயத்தனங்களில் கடந்த வருடம் முதல் ஈடுபட்டு வந்தனர்.

ஆனாலும், எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில் காட்டிய முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அறிக்கையொன்றினை முன்வைக்கவுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தில் ஏற்றுக்கொண்டபடி சிறிலங்கா போர்க்குற்ற நீதிவிசாரணை நீதிப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே நிராகரித்துள்ளது. இந்த நிலையில், அவரது அறிக்கை மிகவும் இறுக்கமானதாகவே இருக்கும் என்றும், அந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலும் எதிரொலிக்கலாம் என்றும், சிறிலங்கா ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதில் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளிடம் தெரிவித்தார்.  

செய்தி சேவை
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரண்டாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
ஸ்ரீலங்கா படையினர் குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை குறைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
மேலும்...
வடக்கில் புத்தர் சிலை உடைப்பு; தென்னிலங்கை கும்பலொன்றே மேற்கொண்டது
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதன் பின்னணியில் யெற்படும் சூத்தரதாரிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
மேலும்...
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்
மேலும்...
பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் ஜெனீவாவில் ஸ்ரீலங்கா மீது கடும் கேள்விக்கணை
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசு, பாலியல் வன்கொடுமைகள் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இராணுவ மயமாக்கல் தொடர்பில் கடுமையான கேள்விகளுக்கு முகம்கொடுத்துள்ளது.
மேலும்...
யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்
[ Wednesday,11 January 2017, 14:40:24 ]
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017