12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானம்! விமானிகள் இருவர் பலி!

5shares
Image

நேபாளத்தில் மகலு விமானத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் இரு விமானிகள் பலியாகியுள்ளனர்.

நேபாளத்தின் சிமிகோட் பாஸ் மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுர்க்ஹெட் விமானதளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தது.

பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விமானம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததுடன் வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிச்சென்ற இரண்டு விமானிகளும் விபத்தில் பலியாகியுள்ளனர். விமானி கிரன் பட்டாராய் மற்றும் துணை விமானி அதித்யா நேபாளி ஆகியோரே இந்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஹுங்ஹார் ஆற்றங்கரையில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!