வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வழங்கி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண தொகை
அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு 25,000 ரூபாய் அவசரநிலை நிவாரண உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கும், அவசியமான வாழ்வாதாரப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த உதவித்தொகை உதவுவதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலப்பிரிவில் இன்று வெள்ள பாதிப்பு நிவாரண கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரண கொடுப்பனவு (25,000ரூபா) வழங்கி வைக்கப்பட்டதோடு, நிவாரணம் மற்றும் நடமாடும் சேவையும் நடாத்தப்பட்டுள்ளது.
செய்தி - ராஜுகரன்
கிழக்கு மாகாண நிலை
அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் வகையிலான விசேட கூட்டம் இன்று (09) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்ணசேகர தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பிரதம செயலாளர் டீ ஏ சீ என் தலங்கம, மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், திணைக்களங்களின் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது. டிட்வா புயல் தாக்கத்தினால் கிழக்கு மாகாண மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் ஏற்பட்ட பகுதிகளின் உற்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக அரசினால் வழங்கப்படவுள்ள இழப்பீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் மற்றும் நீர் இணைப்புக்களை நேர்த்தியாக்குதல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
செய்தி - தொம்சன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |