போதைப்பொருளை இரகசியமாக கைமாற்றும் அதிகாரி! சபையில் அம்பலப்படுத்திய ரிஷாட் எம்.பி
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை நுரைச்சோலை காவல்துறை பொறுப்பதிகாரியின் ஆதரவோடு விநியோகிக்கும் போதைப்பொருள் மாப்பிய தொடர்பிலான குரல்பதிவு அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மீண்டும் அதற்கு சொந்தமான கும்பலிடம் வழங்குவது தொடர்பில் குறித்த குரல்பதிவு அமையப்பெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(12.11.2025) கேள்வி எழுப்பப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேக்கர தனது உரையின் போது “வடக்கு கிழக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் காவல்துறையும் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்துகின்றார்.
ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மையை அறிந்து கருத்த தெரிவியுங்கள்” என கூறியிருந்தார். இதன்போது அவரது உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், “சபாநாயகரே தற்போது பாதுகாப்பு பிரதியமைச்சர் போதைப்பொருள் கடத்தலில் இராணுவம் மற்றும் காவல்துறையின் ஈடுபாடு குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால் தற்போது ஒரு குரல்பதிவு வெளியாகி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. நுரைச்சோலை காவல்துறை பொருப்பதிகாரியின் நடவடிக்கை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. இதற்கு என்ன பதிலை அரசாங்கம் கூறப்போகிறது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |