யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி கருத்து
நாட்டில், கண்சத்திர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளும் வைத்தியசாலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13.11.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் முத்துசாமி மலரவன் தலைமையேற்று கண் தொடர்பான சத்திர சிகிச்சைகளை விரைவுபடுத்தி வருவதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அடையாள பணிப்புறக்கணிப்பு
அத்துடன் கண் சுகாதாரம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை திட்டத்தினை மேம்படுத்துவதற்கான, ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |