பசிலின் நள்ளிரவு ஒப்பந்தம் - ரணில் எடுத்த முடிவு
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
United States of America
By Sumithiran
2 மாதங்கள் முன்
அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், நியூ ஃபோர்ட்ரஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் நள்ளிரவில் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை தொடர தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவில் ஒப்பந்தம்
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவால் அமெரிக்க நிறுவனமான New Fortress Company உடன் நள்ளிரவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கு அப்போது எரிசக்தி அமைச்சராக இருந்த உதய கம்மன்பில மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்