அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்...! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் (USA) வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட ட்ரம்ப் (Donald Trump) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்ட விரோத குடியேற்றம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று உள்ள ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கிறார்.
இதற்கிடையே தனது 2-வது முறை ஆட்சியில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
குறித்த விடயம் தொடர்பில் ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |