பிக்குகளாக இருந்தாலும் சட்டத்தின் முன் சகலரும் சமமே: பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அரசாங்கத்தின் விளக்கம்

Anuradhapura Sri Lanka Police Investigation Child Abuse Nalinda Jayatissa
By Rakesh May 27, 2026 12:26 AM GMT
Report

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயத்தில் சட்டம் நியாயமாக நடைமுறைப்படுத்தப்படும். பௌத்த பிக்குகளாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மொஜ்தபா கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மொஜ்தபா கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை

பாகுபாடுமின்றி நடவடிக்கை

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர்,

பிக்குகளாக இருந்தாலும் சட்டத்தின் முன் சகலரும் சமமே: பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அரசாங்கத்தின் விளக்கம் | Buddhist Monks Anuradhapura Child Case

"பௌத்த பிக்குகளாக இருந்தாலும், அவர்கள் நாட்டிலுள்ள நடைமுறைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி நிச்சயம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போதைய சூழலிலும் கூட, அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எந்தவொரு தடையுமின்றி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாலியல் தொழிலாளி என மிக மோசமாக விமர்சித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

விரிவான விசாரணை

காவல்துறையினர் இது குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விசாரணைகளின் போது வெளிவரும் உண்மைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே, அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களிலோ அல்லது ஏனைய வழிகளிலோ அவ்வாறு பொறுப்பற்ற முறையில் அவதூறு தெரிவிக்கப்பட்டமையால், பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் அவரது தாய் உள்ளடங்கலான ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான மன உளைச்சல்களுக்கும் சமூகப் பாதிப்புக்களுக்கும், அவ்வாறு கருத்து வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்பு கூற வேண்டும்.

இதனை மிகச் சாதாரணமான ஒரு விடயமாகக் கருதி, எவரும் இலகுவாகக் கடந்து சென்றுவிட முடியாது. இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் 15 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் மிக விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர்  உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத் தன்மைக்கு அமைவாக, அடுத்தடுத்து மேலதிக சாட்சிப் பதிவுகளும் இடம்பெறும்” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020