பலநாள் கடற்றொழில் படகிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு!
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, பலநாள் கடற்றொழில் படகில் போதைப்பொருள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கைப்பற்றப்பட்ட பலநாள் கடற்றொழில் படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
அவற்றின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் சோதனை
போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் கடற்றொழில் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த பலநாள் கடற்றொழில் படகு இன்று (02.11.2025) காலை திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், அதில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட பொருட்கள் கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
மேலும், படகிலிருந்த 6 சந்தேகநபர்களையும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 7 மணி நேரம் முன்