பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள்: சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் காலாவதியானவை என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில், குறித்த பொருட்களில் காலாவதி திகதி என 2024 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.
டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கை மோசமான ஒரு பேரழிவை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சர்வதேச நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் இராணுவம்
அந்தவகையில், தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பாகிஸ்தான் விமானப்படையின் ஆதரவுடன், பாகிஸ்தான் இராணுவத்தின் 45 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் C-130 ரக விமானத்தில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இவ்விடயம் சமூக ஊடகங்களில் பல விதமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இலங்கை மக்கள் பல வருடங்களாக இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காலாவதியான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் அவமரியாதைக்குரியது என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த புகைப்படங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |