எரிவாயு விலையில் ஏற்பட்ட திருத்தம்! - முழுமையான விபரம்
விலை சூத்திரத்திற்கு அமைய லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன் விலைகள் அதிகரிக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 250 ரூபாவிலும் 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 100 ரூபாவிலும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
அதற்கமைய, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,610 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,850 ரூபாவாகவும் 2.3 கிலோ சிலிண்டரின் புதிய விலை 860 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
