புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ் பல்கலையின் அவசர அழைப்பு...!
சீரற்ற காலநிலையினால் அவதியுறும் மக்களுக்கு சேவையினை வழங்க புலம்பெயர் இலங்கை வைத்தியர்கள் முன்வர வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி வைத்திய கலாநிதி ரா.சுரேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் மருத்துவப்பீடத்திலிருந்து பட்டம் பெற்று பல மாணவர்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இது மட்டுமன்றி இலங்கையிலும் நிறைய பேர் பணிபுரிந்து வருகின்ற நிலையில், அனைவரும் நாட்டின் சுகாதார சேவையை மீள கட்டியெழுப்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல், மக்களுக்கு உள்ள அவசர தேவை மற்றும் பலதரபட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |