தொடரும் பதற்றம்! நடுக்கடலில் பற்றியெரியும் இரசாயனக் கப்பல்
Fire
Colombia
MV Jim Kingston
By Chanakyan
பிரிட்டிஸ் - கொலம்பியாவில் இருந்து சுரங்க இரசாயனங்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் தாங்கிய கப்பலொன்று விக்டோரியா கடலில் தீப்பிடித்துள்ளதாக கனேடிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை எம்.வி.ஜிம் கிங்ஸ்டன் என்ற கப்பலே அவ்வாறு தீப்பற்றியுள்ளது். இதில் இருந்து 16 பேர் வெளியெற்றப்பட்டுள்ளதாகவும் தீயினைக் கட்டுப்படுத்தும் பணிக்காக 5 பேர் கப்பலில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கூவர் தீவின் மேற்கு தெற்கு கடற்கரையிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மேலும் வாங்கூவர் மற்றும் சியாட்டில் துறைமுகங்களுக்கான வணிகக் கப்பலின் போக்குவரத்து தடையின்றித் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி