ஐந்து நாடுகளில் சொத்துக்களை குவித்துள்ள அமைச்சர்
Parliament of Sri Lanka
Roshan Ranasinghe
By Sumithiran
1 மாதம் முன்
தமக்கு ஐந்து நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவை அனைத்தும் இலவச சொத்துக்கள் என்றும், அவை தனது கடின உழைப்பால் சம்பாதித்தவை என்றும் கூறினார்.
அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார்
தாம் தனிப்பட்ட முறையில் அமைச்சுப் பதவியில் இருந்து எதனையும் ஈட்டவில்லை எனத் தெரிவித்த அவர், எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏழை, எளியோருக்கு உதவ அமைச்சர் பதவியைப் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தனது அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நன்றி நவிலல்