ஒமிக்ரோனிலிருந்து தப்ப முடியாது - இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
srilanka
omicron
Dr. Padma Gunaratne
By Sumithiran
தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட Omicron Covid வைரஸ், இலங்கைக்கு பரவுவதைத் தடுக்க முடியும் என்பது நம்பமுடியாதது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.
இந்த ரகம் வேகமாகப் பரவி வருவதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நோய் பரவுவதை முடிந்தவரை தாமதப்படுத்துவதே சிறந்த நடவடிக்கை என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன(Dr. Padma Gunaratne) தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவுவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பயனுள்ள தடுப்பூசி திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே பல ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி