சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka Ranwala) பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் கல்வித்தகைமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் தாம் பதவியிலிருந்து விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்திருந்தார்.
பதவி விலகல்
சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா (Prathibha Mahanamahewa) தெரிவித்திருந்தார்.
இதேவேளை புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளான எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |