கோட்டாபயவுக்கு எதிரான தடை உத்தரவின் பின் சலேவுக்கு வெளிவந்த பிரச்சினைகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் பின்னரே அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேவுக்கு பல்வேறான பிரச்சினைகள் வௌிவந்துள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நானயகார சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(09.06.2026) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சலேவின் மனித உரிமைகள்
''சுரேஸ் சலேவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தற்போது சில தரப்பினர் கூறிவருவதை காணமுடிகிறது.

இவ்வளவு காலம் இல்லாத அனைத்து பிரச்சினைகளும் தற்போது அவருக்கு உருவாகியள்ளது.
90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் வராத அனைத்து பிரச்சினைகளும் வெளிவருகின்றன.
இந்த கரப்பான் பூச்சி கதைகள் எல்லாம் கோட்டாபயவுக்கு எதிரான உத்தரவின் பின்னரே உருவெடுத்துள்ளன.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்
விசாரணையை இவர்கள் சுரேஸ் சலேவுடன் முடித்துக்கொள்ள பார்க்கின்றனர். விசாரணை தொடர்ந்தால் இன்னும் அனேகமானோர் இதில் சிக்கக்கூடும் என்ற பயம் உறுவாகியள்ளது.

எது எவ்வாறாயினும் உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இன்று சலேவுக்கு இவ்வளவு தூரம் கதைக்கும் இவர்கள் அன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அரை காற்சட்டையுடன் அடைத்தபோது எங்கு இருந்தனர்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்