தடுக்கவே முடியாத ஆயுதம்: முதல் முறையாக போரில் களமிறக்கும் ரஷ்யா
ரஷ்யாவின் ஓரேஷ்னிக் (Oreshnik) எனப்படும் புதிய ஹைப்பர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணையை எதிர்த்து இடைமறிக்கும் சக்தி தற்போது உலகில் எங்கும் இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஓரேஷ்னிக் பலிஸ்டிக் ஏவுகணையை ரஷ்யா தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தும் என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த ஏவுகணையை வான் பாதுகாப்பு மூலம் இடைமறிக்க முடியாது என்றும், இதன் தொடர் தயாரிப்புகளை ரஷ்யா தொடங்கும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் உற்பத்தி
இதன்படி, மேலும் பல சோதனை நடவடிக்கைகளுக்காக இந்த ஏவுகணையை ஒத்ததாக பலவற்றை தயாரிக்கவுள்ளதாவும் புடின் தெரிவித்துள்ளார்.
⚡️Russia plans to launch mass production of Oreshnik missile, Putin says.
— The Kyiv Independent (@KyivIndependent) November 22, 2024
Russian President Vladimir Putin said that Russia will continue to test the Oreshnik intermediate-range ballistic missile, including in combat conditions.https://t.co/Lq1G2BSrja
இதேவேளை, சோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆயுதங்கள் உற்பத்திக்கு செல்லும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷ்யா ஒரேஷ்னிக் ஏவுகணையை ஏவிய ஒரு நாளுக்குப் பிறகு புட்டினின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.
முதல் முறை
சமீபத்தில் உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா ஏவியதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்த நிலையில், மேற்கத்திய அதிகாரிகள் பின்னர் அந்த ஆயுதம் ஒரு சோதனை இடைநிலை ஏவுகணை அடையாளம் என குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, போரில் இதுபோன்ற ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |