ரணிலின் அரசில் சனத் ஜயசூரியவுக்கு கிடைத்த பதவி
சுற்றுலாத்துறை தூதுவர்
இலங்கையின் சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (04.08.2022) இடம்பெற்றது.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்
சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர், மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்