சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி
சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய இராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் சிரியாவை விட்டு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார்.
ஆட்சி கவிழ்க்கப்பட்டதை சில இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் கொண்டாடிய அதே வேளையில் தலைநகர் டமாஸ்கஸில் குழப்பமும் பதற்றமும் நீடித்தது.
புகுந்த கொள்ளையர்கள்
வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியுடன் ஓடியது முதல் ஜனாதிபதி அசாத்தின் வீட்டிற்குள் புகுந்து சிலர் சூறையாடுவது வரையிலான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இணையத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் இளைய சகோதரர் மகேர் அசாத்தின் பங்களாவிற்கு கீழ் கட்டப்பட்டு இருக்கும் ரகசிய பதுங்கு குழி காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
பல படிக்கட்டுகள்
அதில், கதவு ஒன்று திறக்கப்படும் போது நீண்ட மற்றும் செங்குத்தான பல படிக்கட்டுகள் கொண்ட சுரங்கப்பாதை அமைப்பு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிசவிக்கப்பட்டுள்ளது.
Footage allegedly showing the Assad family's bunker surfaces online
— NEXTA (@nexta_tv) December 8, 2024
Local media claim the video was filmed in a shelter beneath the palace of Maher Assad, the younger brother of Bashar Assad. The bunker reportedly stored gold and weapons belonging to the dictator's family. pic.twitter.com/DwNBafrFjD
மேலும், சுரங்கப்பாதையின் அடிப்பகுதியில் பல அறைகள் இணைக்கப்பட்டு உள்ளதுடன் அதில் ஒரு அறையில் பிளாஸ்டிக் பெட்டிகள், பிரீஃப்கேஸ்கள் மற்றும் இழுப்பறைகள் ஆகியவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |