இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான ஷெல்த் தாக்குதல்- பிரித்தானியாவிற்கு அழுத்தம்!

arrest army sri Lanka united nation
By Kalaimathy Jan 15, 2022 04:29 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் சமூகம், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை ஜெனரல்கள் மீது தடைகளை விதிக்க உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் அவரைக் கைது செய்யுமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை ஜெனரலும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜகத் ஜயசூரிய மீதான தடைகள் தொடர்பான 98 பக்க அறிக்கையை, உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் (ITJP) இரண்டாவது தடவையாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பியதை அடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான ஷெல்த் தாக்குதல்- பிரித்தானியாவிற்கு அழுத்தம்! | Sri Lanka United Nation Army

2021 ஆம் ஆண்டில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய கோப்பு ஒன்றை சமர்ப்பித்தது, அவர் ஏற்கனவே மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டிருந்தார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நம்பகமான அடிப்படையைக் கொண்டிருப்பதாக, ஐ.நா விசாரணைகள் தீர்மானித்த 2009ஆம் ஆண்டு போரின் போது, அவர் ஜெனரல் ஜகத் ஜயசூர்யாவின் கீழ் அவர் தளபதியாக பணியாற்றினார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய 2007 முதல் 2009 வரை வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தார், அவரால் ஒப்புக்கொண்டதற்கு அமைய, இறுதிக் கட்டப் போரின் போது, தமிழ் பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது கண்மூடித்தனமான ஷெல் மற்றும் குண்டுவீச்சுகளை நடத்திய முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டார்.

உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தை கடைபிடிக்கும் ஒரு நாடு, உலகில் எந்த நாட்டிலும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக தனது சொந்த நாட்டில் நடவடிக்கை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

"இங்கிலாந்தில் வாழும் இந்த இலங்கைத் தளபதிகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூகா கூறியுள்ளார்.”

ஆனால் அது மட்டும் போதாது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் கோரியபடி, தடைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கு பொறுப்புக்கூறலை நீடிக்க ஐக்கிய நாடுகள் சபை செயல்பட வேண்டும். பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இங்கிலாந்து முன்னிலை வகித்து, ஒரு நல்ல முன்மாதிரியாக செயற்படாவிடின் அது அவமானமாக அமையும்.

2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தும் இலங்கையின் தேசிய குத்துச்சண்டை தேர்வுக் குழுவின் தற்போதைய தலைவராக ஜெயசூர்ய இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான ஷெல்த் தாக்குதல்- பிரித்தானியாவிற்கு அழுத்தம்! | Sri Lanka United Nation Army

"பிரித்தானியா அரசாங்கம் தற்போது செய்யக்கூடிய மிகக்குறைந்த செயற்பாடு என்னவெனில், இந்த ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் தனது அணியுடன் ஜெயசூரிய கலந்துகொள்வதற்குப் பிரித்தானியா வரும்பட்சத்தில் சர்வதேச சட்டவரம்பின்கீழ் அவரைக் கைதுசெய்யும் எதிர்பார்ப்புடன், ஒரு விசாரணை ஆரம்பிக்கலாம் என்பதேயாகும்” என என தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.

மேக்னிட்ஸ்கி சவேந்திர சில்வாவுக்கு எதிராக ஏன் இன்னும் தடைகளை விதிக்கவில்லை என கேள்வி எழுப்பி பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ள தமிழர்கள் பல வருடங்களாக பல நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளனர்.

"இந்த விடயத்தை மூடிமறைப்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டு, உண்மையில் இந்த போர்க்குற்றவாளிகள் மீது தடைகளை விதிக்க வேண்டிய நேரம் இது" என்று கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் கூட்டணியின் கஜேன் ராஜ் கூறியுள்ளார்.

"இலத்தீன் அமெரிக்காவில் நீதியை விட்டு ஓடிய கோழை ஜகத் ஜெயசூர்ய மீது தடை விதிப்பது எளிதான முதல் படி" என டி.ஜே. தயாளன் தெரிவித்தார். "ஓய்வு பெற்றவராக இருப்பதாலும், உத்தியோகபூர்வ பதவியை வகிக்காமல் இருப்பதாலும், பிரித்தானியாவிற்கு ஏற்படும் அரசியல் இழப்பு என்பது மிகக் குறைவு, ஆனால் அது நமது சமூகத்தில் மன உறுதியையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்” உலகளாவிய மேக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ் இலங்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவும் ஆதரவுத்தர முன்வந்துள்ளது.

"ஏற்கனவே சில நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட இராணுவத்தினர் உட்பட இராணுவ வீரர்கள் மீது தடைகளை விதிக்குமாறு எங்களின் அனைத்து உறுப்பினர்களும் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டில் வாழும் பரந்த மற்றும் செல்வாக்குமிக்க தமிழ் சமூகத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நாம் பேண வேண்டுமானால், நாம் செயல்பட வேண்டும் என குழுவின் தலைவர் எலியொட் கோல்பன் கூறியுள்ளார்.

"வருடாந்த தைப்பொங்கல் அல்லது அறுவடைத் திருநாளை முன்னிட்டு அடுத்த வாரம் தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் செய்தியில், வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள எனது சகாக்கள் இலங்கை மீது தடையை விதிக்க வேண்டிய நேரம் இது என்பதை மீண்டும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான ஷெல்த் தாக்குதல்- பிரித்தானியாவிற்கு அழுத்தம்! | Sri Lanka United Nation Army

அமெரிக்காவில் சவேந்திர சில்வாவைத் தடைசெய்வதற்கும், சிலி நாட்டில் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கும் போதுமாக ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்ற நிலையில் - சிறிலங்கா மீதான பொறுப்புக்கூறல் தொடர்பாக பிரித்தானியாவின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில், சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பிரித்தானிய அரசாங்கம் கவனமாகப் பார்க்கவேண்டிய நேரம் இதுவாகும்" என மக்னிஸ்கி தடைகள் தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவுக்கான செயலகத்தினை நடத்திவரும் ரெட்ரெஸ் அமைப்பின் சர்வதேச சட்ட ஆலோசகரான சார்லி லௌடன் கூறியுள்ளார்.

'இவ்விரு ஜெனரல்கள் மீதான நடவடிக்கையானது வெறும் தொடக்கமாகவே இருக்கவேண்டும் - 2009 இல் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இன்னும் பலருக்கு எதிராக ஒரு வழக்குப் பதியப்பட்டுள்ளது" என அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை இயக்கத்தின் பணிப்பாளர் மெலிசா ட்ரிங் தெரிவித்தார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ஜகத் ஜயசூரிய, 2017ஆம் ஆண்டு பல அதிகார வரம்புகளுக்கு உட்பட்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் மற்றும் அதன் பங்காளி அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஜெனரல் ஜயசூர்யா தனது வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்காக பிரேசிலில் தங்குவதற்குப் பதிலாக, அவர் இலங்கைக்குத் திரும்பினார், எனினும் அவருக்கு எதிராக வழக்குகள் எதுவும் தொடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதிகள் குழுவுடன் இணைந்து இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான தீர்மானத்தை 2019 இல் உருவாக்கினார்.

மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023