போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்!

Shavendra Silva Sri Lanka Sri Lanka Final War United States of America United Kingdom
By Kalaimathy 1 மாதம் முன்

சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வேல்ஸ் அரசாங்கம் (Government of Wales) மற்றும் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, வேல்ஸ் பகுதியிலுள்ள சினோன் வல்லி (Cynon Valley) என்ற பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பெத் வின்ரர் (Hon Beth Winter MP)  உடன் கடந்த புதன்கிழமை (17.08.2022) மாலை 4:30 மணியளவில் zoom இணைய வழியாக இடம்பெற்றுள்ளது.

சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானியாவிடம் கோரிக்கை

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

இலங்கையில் யுத்தத்தினாலும் சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு, உயிர் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியாவில் அடைக்கலம் கேட்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் வேல்ஸ், சினோன் வல்லி பகுதியில் வாழ்பவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை மனித உரிமை செயற்பாட்டாளரும் மூத்த சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் தலைமை தாங்கி, நடத்தியிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் மற்றும் யுத்த குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும்,  சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவால் முடிந்தது ஏன் பிரித்தானியாவால் முடியாது?

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டுமெனவும் அவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டுமெனவும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் விசேடமாக இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினை பிரதான போர்க்குற்றவாளிகளில் ஒருவர் என உறுதிசெய்து அமெரிக்கா அவர் மீது பயணத்தடை விதித்தது போல் பிரித்தானியாவும் தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்காவினால் அதனை செய்ய முடியுமாயின் ஏன் பிரித்தானியாவால் செய்ய முடியாது போனது என கீத் குலசேகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவேந்திர சில்வா மீதான தடையை விரைவுபடுத்த உறுதியளிப்பு

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

மேலும் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளருக்கு சவேந்திர சில்வா மீதான தடையை கோரி ஏற்கனவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியது போல் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் தாங்களும் பிரித்தானிய அரசை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தான் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததுடன் சவேந்திர சில்வா மீதான தடை நடவடிக்கையை விரைவுபடுத்தி இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இனவழிப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.

இந்த இணையவழி சந்திப்பில் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) என்ற அமைப்பின் தலைவரான சென்.கந்தையா கலந்து கொண்டு சிறப்புக்கருத்துக்களை வழங்கியதுடன் The Sri Lanka campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) மற்றும் Redress அமைப்பின் சட்ட அதிகாரி மெகன் சிமித் (Megan Smith) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

இதன் போது, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் சித்திரவதைக்குட்பட்டு தப்பிவந்துச் சென்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022