வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட சலுகை
Dollar to Sri Lankan Rupee
Manusha Nanayakkara
Sri Lankan Peoples
By Vanan
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான விசேட யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை நாட்டுக்கு அனுப்பிய வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கே இச்சலுகை வழங்கப்படவுள்ளது.
தொழில் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.