தையிட்டி பாதை விவகார சர்ச்சை : வலிவடக்கு தவிசாளருக்கு எதிராக நீதிமன்ற படியேறிய காவல்துறை

Sri Lanka Police Tamils Jaffna
By Theepan May 10, 2026 05:09 PM GMT
Report

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தனியார் காணிகள் , பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என்பவற்றை அடாத்தாக கையகப்படுத்தி தையிட்டி பகுதியில் அனுமதிகள் எதுவும் இன்றி விகாரை கட்டப்பட்டுள்ளது.

எழுத்தில் உறுதிமொழி கேட்ட மக்கள்

குறித்த விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் , கடந்த 28ஆம் திகதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி , காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

தையிட்டி பாதை விவகார சர்ச்சை : வலிவடக்கு தவிசாளருக்கு எதிராக நீதிமன்ற படியேறிய காவல்துறை | Summons To The Vali North Chairman

 அதன் போது காணி உரிமையாளர்கள் , "காணிகளை விடுவிக்கவே அளவீடு செய்கிறோம்" என எழுத்தில் உறுதி மொழி கேட்ட நிலையில் , நீண்ட இழுபறிகளின் பின்னர் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டன.

"பவானி" வீதி அளவீடு

இந்நிலையில் , விகாரை பகுதிக்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதியை அளவீடு செய்ய தவிசாளர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வீதி அளவீடு செய்யப்பட்டது.

தையிட்டி பாதை விவகார சர்ச்சை : வலிவடக்கு தவிசாளருக்கு எதிராக நீதிமன்ற படியேறிய காவல்துறை | Summons To The Vali North Chairman

 அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை நாளைய தினம் திங்கட்கிழமைக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை வேலியை அகற்றும் , வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்துள்ளார்

பலாலி காவல் நிலையத்தில் விகாராதிபதி முறைப்பாடு

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி காவல் நிலையத்தில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

தையிட்டி பாதை விவகார சர்ச்சை : வலிவடக்கு தவிசாளருக்கு எதிராக நீதிமன்ற படியேறிய காவல்துறை | Summons To The Vali North Chairman

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி காவல்துறையினர் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

   அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல்

அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

தையிட்டி பாதை விவகார சர்ச்சை : வலிவடக்கு தவிசாளருக்கு எதிராக நீதிமன்ற படியேறிய காவல்துறை | Summons To The Vali North Chairman

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளரை நாளைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

நாளைய தினம் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் தவிசாளர் முன்னிலையாக உள்ள நிலையில் , வேலியை அகற்றுவது தொடர்பில் நீதிமன்று முக்கிய அறிவித்தலை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக எம்.பிக்கள் நியமனம்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக எம்.பிக்கள் நியமனம்

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலை : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலை : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016