உக்ரைனில் ரஷ்யா சரமாரித் தாக்குதல்! மூன்று பேர் படுகொலை
உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள சுஹுயேவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் அவசரக்கால சேவைப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் 70 மற்றும் 50 வயதுடைய இரு ஆண்களும், 70 வயதுடைய ஒரு பெண்ணுமே உயிரிழந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு பேர் காயம்
இதேவேளை, ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தின் தலைநகரான கார்கிவ் நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலினால் அங்குள்ள பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், நகரின் பல இடங்களிலும் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்