ஐரோப்பிய பயணத்தில் அர்ச்சுனா திரட்டிய ஆதாரம்! மீண்டும் உருவாக்கிய குழப்பம்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (14.11.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் காணப்பட்டமைக்கு தனது ஐரோப்பிய பயணத்தின் போது பல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
.சர்ச்சைக்குரிய கொள்கலன்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொள்கலன்களில் இருந்தது ஆயுதங்கள் தான் என்பதை நான் பயமின்றி கூறுகிறேன்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மூலமே இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும், இவ்விடயம் தொடர்பில் என்னை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
என்னுடைய கொள்கலன்கள் என எல்லா இடங்களிலும் கூறி வருகின்றனர். நான் இன்றும் பொறுப்புடன் கூறுகிறேன்.
விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்களே காணப்பட்டன என்பதை உறுதியாக கூறுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |