மே மாதம் இடம்பெற்ற படுகொலைகளின் பட்டியல்

123shares

ஈழத்தமிழர் வரலாற்றில் மே மாதம் என்பது வலிசுமந்த மாதமாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுகள் வாட்டும். அங்கு நடந்த கொடுமைகள் ஈழத்தமிழர் வரலாற்றில் பெரும் கறை படிந்த மனித ஒலத்தின் வலிசுமந்த நாட்கள். இறுதியாக ஐ. நாவும் கைவிட்ட நிலையில் எந்த பக்கத்தாலும் அதற்கான நீதி கிடைக்காத தன்மையிலும் நினைவழியா நாட்களாக அவற்றை மனதில் நிறுத்தலை தவிர வேறேதும் செய்ய முடியாத கையாலாகாத நிலை மட்டுமே விஞ்சியுள்ளது.

இதவேளை இந்த ஈழத்தமிழன், 2009ற்கு முன்னரும், பல மே மாதங்களில் சிங்கள இராணுவ, போலீசார், இராணுவம் சாராத ஆயுததாரிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படைகளின் வெறியாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தான்.

அவர்களும் இங்கு, இந்த மாதத்தில் நினைவு கூரப்படவேண்டியவர்களாவர்.

*யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 12 May 1985 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வெறியாட்டத்தில் 70 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

*நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையில் 15 May 1985 அன்று குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலையில் 34 பேர் சிறிலங்கா கடற்படையால் குத்தியும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

*அம்பாறை தம்பிலுவிலில் 17 May 1985 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் அடடூழியத்தால் 44 பேர் குத்தியும் வெட்டியும் சுட்டும் எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.

*திருகோணமலை கிளிவெட்டி கிராமத்தில் 30 May 1985 அன்று 44 பேர் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரால் வெட்டியும் சுட்டும் எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.

*திருகோணமலை புல்மோடடை கிராமத்தில் வயலில் 6 May 1995 அன்று காவலுக்கு நின்ற தமிழ் அப்பாவி விவசாயிகள் 09 பேர் எந்தவித காரணமில்லாமல் சிங்கள ஊர்காவல் படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

*03.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழர் பூர்வீக கிராமங்களான தேக்கவத்தை மற்றும் மகிந்தபுரம் ஆகியவற்றின் மீது சிங்கள காட்டுமிரண்டிகளின் தாக்குதலில் 60 க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மிகுதிபேர் அந்த கிராமத்தை விட்டே தப்பி ஓடி விட்டனர். இன்று அந்த இரு கிராமங்களும் முற்று முழுதான சிங்கள கிராமங்கள்.

*23.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி மற்றும் தெற்கு மூதூர் பகுதிகளில் சிங்கள ஊர்காவல் படையினர் நடாத்திய அட்டூளியத்தில் 12 அப்பாவி தமிழர்கள் மாய்ந்தனர்.

*24.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தில் அன்புவழிபுரம் பகுதிகயில் சிங்கள ஊர்காவல் படைஉயினர் நடாத்திய அட்டூளியத்தில் 10 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

*25.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட 11 தமிழர்கள் சிங்கள ஊர்காவல் படையின் கடும் சித்திரைவதைக்கு பின்னர் கொல்லப்பட்டு கங்குவெளி குளத்தில் போடப்பட்டனர்.

*26.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று கிராமத்தில் இருந்த 40 குடிசைகளை எரித்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி இருந்தனர் சிறிலங்கா கடற்படையினர். 3 நாட்களுக்கு பின்னர் 4 பேரின் எரிந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

*27.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தின் மகிந்தபுரத்திற்கு அருகே 51வது மைல் போஸ்ற்க்கு அருகில் அரச பேருந்தில் பயணித்த 11 அப்பாவிகள் மற்றும் ஓட்டுனர் புஸ்பராஜா மற்றும் நடத்துனர் உட்பட 13 பேரை சுட்டும் எரித்தும் கொன்றனர் சிங்கள ஊர்காவல் படையினர்.

*31.05.1985 அன்று திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி கிராமத்தில் சிறிலங்கா பொலிசாரும் சிங்கள ஊர்காவல் படையினரும் நடத்திய வெறியாட்டத்தில் 31 அப்பாவி தமிழர்கள் வெட்டி சரிக்கப்பட்டனர்.

*12 May 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பள்ளிக்குடாவில் சிறிலங்கா விமானத்தாக்குதலால் 08 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டனர்.

*மன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் 13 May 2000 அன்று சிறிலங்கா கற்படையின் வெறியாட்டத்தில் இரண்டு மீனவர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட்னர்.

*13 May 2006 அன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் 13 பேர் சிறிலங்கா கடற்படையால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

*யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 15 May 2000 அன்று 06 பேர் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

*23 May 2008 அன்று கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் ஆழ ஊடுருவும் இராணுவ அணியின் மிலேச்சத்தனமான கிளைமோர் தாக்குதலில் ஏதுமறியாத 18 அப்பாவித்தமிழர்கள் சிதறுண்டு போனார்கள்.

இங்கே திகதி குறிப்பிடப்படாமல் எத்தனையோ உயிர்கள் இதே மாதத்தில் அரக்கர்களால் காவு கொள்ளப்பட்டு உள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!