மீண்டும் கோத்தபாயா!- ஆதரவு வழங்க தயாராகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!!??

142shares
Image

இன அழிப்புக்காலத்தில், இராஜபக்சகுடும்பத்தின் மும்மூர்த்திகளாக விளங்கியமகிந்த, பசில், மற்றும் கோத்தபாயவின்வல்லரசுகளைக் கையாளும் உத்தி,சிங்களத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது.

பசில் டெல்லியோடும், பச்சைகாட்டைபெற்ற கோத்தா அமெரிக்காவோடும்,மகிந்தா சீனாவோடும் தமது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

பெரியதொரு இனவழிப்பும் இவர்களின்துணையோடு நடந்து முடிந்துவிட்டது.

2009 பின்னரான காலத்தில் மகிந்த தலைமையிலான ஆட்சி சீனாவின்பக்கத்தில் ஒரேயடியாகச் சாய்ந்ததால், ஆட்சி மாற்றம் ஒன்றிற்கான முயற்சியில்அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாகஈடுபட்டன.

2010 அதிபர் தேர்தலில், இனவழிப்பின்முதன்மைச் செயற்பாட்டாளர் சரத்பொன்சேகாவை சீன சார்பு மகிந்தருக்குஎதிராக இறக்கி, அவருக்கு தமிழர்களையே வாக்களிக்க வைத்தது அமெரிக்காவும்இந்தியாவும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்குத்துணை போனது.

'இவர்கள் சொன்னபடி கேட்டால், தீர்வுகிடைக்கும்' என்ற பொய்யான பரப்புரையை தமிழ் மக்கள் மீது திணித்தது கூட்டமைப்பு.

மீண்டும் ஒரு முயற்சி.

இம்முறை மகிந்த அணியிலிருந்து மைத்திரியை பிரித்தெடுத்து, இரணிலோடு இணைத்து, கூட்டமைப்பின் ஆதரவோடு மகிந்த குடும்பத்தின் சீனச்சார்பு ஆட்சிவீழ்த்தப்பட்டது.

மகிந்த அணி சும்மா இருக்குமா??

சுதந்திரக்கட்சியில் இருந்தவாறே,பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஜி.எல்.பீரீசை வைத்து ஆரம்பித்து, கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அமோகவெற்றியும் பெற்றது.

இதனால் மட்டுமல்ல, தாங்கள்கொண்டுவந்த நல்லாட்சி அரசு சீனாவின்ஆதரவை ஏற்றுக்கொள்கிறது என்கிறகவலையும் அமெரிக்க-இந்தியஅணிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99வருடக் குத்தகைக்கு சீனக் கொம்பனிக்குகொடுத்த விவகாரம், ஆழ்ந்த சோகத்தில்இவர்களை ஆழ்த்திவிட்டது.

எப்படியும் மும்மூர்த்திகளின் ஆட்சியேமீண்டும் வரப்போவதை உணர்ந்தஅமெரிக்கா, மகிந்த குடும்பத்துள்கோத்தபாயாவின் பலத்தினை அதிகரிக்கும்வகையில் பல நகர்வுகளை செய்யஆரம்பித்துள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதிகளும், முன்னாள்அமைச்சர்கள் பலரும்கோத்தபாயாவிற்கான தமது ஆதரவினைபகிரங்கமாக தெரிவிக்கஆரம்பித்துள்ளார்கள்.

பௌத்த சிங்கள பெருந்தேசியவாதத்தின்பிதாமகனாக, கோத்தாவை சித்தரிக்கும்பரப்புரை ஆரம்பமாகிவிட்டது.

இலங்கையில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்என்பதல்ல வல்லரசுகளின் பிரச்சினை.அவர்கள் முற்றுமுழுதாக தமது பிராந்தியநலன்களுக்கு இசைவாக இருக்க வேண்டும்என்பதையே எதிர்பார்க்கிறார்கள்.

இனி இதுவும் நடக்கலாம்.

அதாவது 'பச்சை மட்டை' கோத்தபாயாஅதிபர் களத்தில் குதிக்கும்போது, இந்திய-அமெரிக்க அழுத்தத்தால், கோத்தபாயாவைஆதரிக்கும் நிலைக்கு கூட்டமைப்புதள்ளப்படலாம்.

சமஸ்டிக் கதை இனிதே முடிந்ததால்,மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரம் பெறஅமெரிக்க- இந்தியத் துணையோடுகோத்தாவோடு பேசுவோம் என்றும்அரசியல் விளக்கம் வேறு கொடுப்பார்கள்கூட்டமைப்பினர்.

சரத் பொன்சேகாவையே ஆதரித்தவர்கள்கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கத்தயங்குவார்களா..என்ன!.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்