பிரெஞ்சு சிறையுடைப்பு ஹெலியில் தப்பிய கொள்ளையர் தலைவன் ஒரு திக்..திக் ரிப்போர்ட்

355shares

பிரான்சின் தற்போதைய மிகமுக்கிய எதிரியார்?

அவரது றடொவன் பைத் (Redoine Faïd))46 அல்ஜீரிய பூர்வீகத்தை கொண்ட இந்த 46 வயதுடையகுற்றவாளிதான் கடந்த 36 மணிநேரத்துக்குபிரான்சின் முதல் எதிரி.

அமெரி;க்காவின் திகிலூட்டும் ஹொலிவூட் திரைப்படங்களை விஞ்சும்வகையில் பரிஸின் புறநகர சிறை ஒன்றில் இருந்து உலங்குவானூர்தி மூலம் றடொவன் பைத் நேற்று தப்பிச்சென்றார். அதன் பின்னர் தற்போதுவரை சுமார் மூவாயிரம் சீருடையினர் அவரை சல்லடை போட்டு தேடிவருகின்றனர்.

ஆயினும் இது வரை அவரும் அவரது குழுவும் சிக்கவில்;லை.

யாரிந்த றடொவன் பைத்? முதலில் இந்த வினாவுக்கு விடை வேண்டுமல்லவா.

1972 இல் கிறய் பகுதியில் பிறந்த வைத் 90களில்இருந்து ஒரு மோசமான குற்றவாளி. வங்கிகொள்ளை, ஆயுதமுனை கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது போன்றன அவருக்கு அல்வா சாப்பிடுவதை போல. இவ்வாறான செயல்களின் மோசமான இந்ததாதா ஹொலிவூட்தாதா படங்களின் பெரியரசிகரும் கூட

அவருக்கு என ஒரு குழுவே உள்ளது. ஒருகட்டத்தில் பிரெஞ்சு காவற்துறை அவரை மோப்பம் பிடிக்க சுவிஸ் இஸ்ரேல்; போன்ற நாடுகளுக்கு கூட ஒடித்தப்பியவர்

2009 இல் கொள்ளையிடுவது குறித்து ஒரு நூலைக்கூட அவர் எழுதியிருந்தார். அதன் தமிழாக்கத்தை வேண்டுமானால் கொள்ளையரும் பெரும் தாதாக்களின் மையமும் எனசொல்லலாம்;.

றடொவன் பைத்தைப் பொறுத்தவரை சிறையில் இருந்து தப்பிச்செல்வது என்பதும் அவருக்கு கைவந்த கலை.

2013 இலும் இவ்வாறு ஒருமுறை பிரான்சின் நிறையில் இருந்து தப்பிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் பின்னர் கொள்ளைச்சம்பவம் ஒன்றிலும் காவல்துறைஅதிகாரி ஒருவரை கொன்ற குற்றத்திலும் கைதானர் அதற்காக 25 வருடங்கள்சிறைத்தண்டனைகிட்டியது.

இந்த நிலையில்; நேற்று தனது குழுவின் உதவியுடன் அவர் செய்த சிறையுடைப்பு மிகத் துணிகரமானது.

முதலில் றடொவன் பைத்தின் கூட்டாளிகள் முதலாவது குழு இதற்கு முதற்சுழி போட்டது

நேற்றுக்காலை உலங்குவானூர்தி ஒட்டிகளுக்கான பயிற்சி நிலையத்துக்கு சென்ற அந்தக்குழு உலங்குவானூhதி பயிற்சியாளர் ஒருவரை ஆயுத முனையில் பணயகைதியாக்கியது. அதன் பின்னர் அவரை மிரட்டி சென் மார்ன் (Seine-et-Marne) பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு அவரை உலங்குவானூர்தியை செலுத்த வைத்தனர்.

இதற்கிடையே இரண்டாவது குழு ஆயுதங்களுடன் சிறையின் நுழைவு வாசலுக்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளை திசைதிருப்ப எரிநெய்குண்டுகளை வீசித்தாக்கியது. அதிகாரிகளின்; கவனம் சிறை முன்றலில் இருக்க அந்தநேரத்தை பயன்படுத்தி உலங்குவானூர்த்தி சிறைமுற்றப்பகுதியில் தரையிறங்கியது.

இந்தநேரத்தில் சிறையின் முற்றத்துக்கு நகர்ந்த றடொவன் பைத்தும் அவரது கூட்டாளிகளும் உலங்குவானூர்தியில் ஏறித்தப்பினர். சுமார் 60 கிலோமீற்றரைவான் மார்க்கமாக தாண்டியபின்னர் பரிசின் புறநகரப்பகுதியான கோணேசில் (Gonesse) உலங்கு வானூர்தியை தரையிறக்கினர்.

அதன் பின்னர் உலங்குவானூர்திக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து கறுப்பு நிற ரெனோ கார் ஒன்றில் தப்பிச்சென்றனர். நல்லவேளையாக உலங்குவானூர்தி ஒட்டியை அவர்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர்.

இப்போது பரிஸ் பிராந்தியம் முழுவதும் றடொவன் பைத்தை தேடி தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது இதுவரை அவரோ இவரது கூட்டாளிகளோ அகப்படவி;ல்லை. இரண்டு தரப்புக்கும் திக்திக் கணங்களாக நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.


இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!