விஜயகலாவால் மீண்டும் களத்திற்கு வந்த சிங்கள பௌத்த பேரினவாதம்: இன்றைய பார்வை

134shares

இலங்கைத்தீவில் தெற்கில் இருந்து கிளம்பும் தமிழர்கள் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையாகவே விடுதலைப்புலிகள் குறித்து சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் சொன்ன கருத்தை மையப்படுத்திய தெற்கின் மனோநிலை அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சிப் பிரவாகத்துடன் கூறியதால் தனது அமைச்சுப் பதவியையும் பறிகொடுத்துள்ள விஜயகலாவிற்கு எதிராக தென் இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் கடும் சொற்கள் அடங்கிள எதிர்ப்புக்கள் தொடர்ந்தும் இலங்கைத் தீவின் தென் பகுதியில் சிங்கள பௌத்த பேரினவாதம் தீவிரமடைந்து வருகின்றதே ஒழிய குறைந்தபாடில்லை என்பதை நிரூபித்துக் காண்பிக்கின்றது.

இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டுக்களத்தில் யார் எந்தப்பக்கத்தில் நிற்கவேண்டும் என்பதை அவர்களின் எதிரணியினர் தீர்மானித்துக்கொள்ளும் ஆட்;டங்கள் தொடரும் நிலையில் அந்த ஆட்டத்தின் மீதான விரிவான பார்வையை செலுத்தியுள்ள ஐ.பி.சி தமிழின் இரவு நேர பிரதான செய்தி அறிக்கையான ஐ.பி.சீ தமிழ் செய்தி நேரம் நேரலையின் சிறப்புத் தொகுப்பான இன்றைய பார்வை ஆராய்கின்றது...…

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?