பிரித்தானியாவில்… பகீரிடும் ரஷ்யவிசம்! அவதானம்!!

  • Prem
  • July 06, 2018
141shares

பிரித்தானியாவில் அமெஸ்பெரி பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் பிரித்தானியாவின் புலனாய்வு கட்டமைப்புகளுக்கு அதிர்ச்சி வழங்கிய இன்னொரு சம்பவமாக பதிவுபெற்றுள்ளது

இப்போது பிரித்தானியாவின் MI-5 மற்றும் MI-6 ஆகிய இரண்டு புலனாய்வுக்கட்டமைப்புக்களின் சவாலுக்குரிய புதியஎதிரியாக நொவிசோக் என்ற கொடிய ரசாயனம் மாறிவிட்டது

உலகின் மிகக்கொடிய ரசாயனமாக அடையாளப்படுத்தபட்ட இந்தவிஷம் தான் முன்னாள் ரஷ்யஉளவாளி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீதான தாக்குதலுக்கு கடந்த மார்ச்சில் பயன்படுத்தப்பட்டது.

சாலிஸ்பெரி நகரில் இடம்பெற்ற தாக்குதல் பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவிலும்; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப்பின்னர் வில்ட்ஷரில் அதே கொடிய ரசாயனத்தின் பாதிப்பு. அதிர்ந்துவிட்டது பிரித்தானியா.

இப்போது மீண்டும்ஒருமுறை இன்று அவசரமாக இதுகுறித்து அது ரஸ்யாவிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆனால் இதற்கு ரஸ்யாவிடமிருந்து வரக்கூடிய பதில் என்ன என்பதை ஓரளவு ஊகிக்கலாம்

இப்போது பதிவாகியுள்ள புதிய சம்பவத்தில் சார்ளி ரோவ்லெ என்ற ஆணும் டௌன் ஸ்டர்யுஸ் என்ற பெண்ணும் நொவிசோக் ரசாயனத்தால்; தாக்குண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வாழ்கும் மரணத்துக்கும் இடையில் போராடும் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

அதுவும் நொவிசோக் ரசாயனத்தை நேரடியாக அல்லாம் அது சார்ந்த ஏதோ ஒரு பொருளை தொட்டதால் தோலின் ஊடாக இது பரவியதாக கூறப்படுகிறது

கடந்த மார்ச்சில் முன்னாள் ரஷ்ய உளவாளியான ஸ்கிரிபால் மீது தாக்குதல் நடத்தபட்ட நகர்வுக்காவது ஒரு காரணம் இருந்தது

ஏனெனில் ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் தமது உளவு வலையமைப்பு குறித்த தகவல்களை ஸ்கிரிபால் பிரித்தானியாவுக்கு வழங்கியதால் அவர் குறித்த ஒரு வன்மம் ரஸ்யாவுக்கு இருந்தது.

ஆனால் தற்போது இலக்குவைக்கப்பட்டுள்ள தம்பதி சாமானியர்களாவே தெரிகிறது அவ்வாறாயின் அவர்கள் எங்கு இந்த ரசாயனத்தை தொட்டார்கள் அதன் பின்னணி என்ன? என்பதும் முக்கிய வினாக்கள்.

இதனையும் விட ரஸ்யாவில் கடுமையான ராணுவக்கட்டுப்பாடு வளையத்துக்குள் இருக்கும் இந்த நோவிச்சோக் ரசாயனப்பூதம் எவ்வாறு 3 மாதகால இடைவெளியில் இரண்டு இடங்களில் பிரித்தானியாவில் வெளிப்பட்டது? இது இன்னொரு முக்கிய வினா

முன்னாள் ரஷ்யஉளவாளி மீது தாக்குதல் நடத்திய அதே நாசகாரக்கரங்களிடமிருந்து இது வந்ததா? இல்லையென்றால் வேறுதரப்பிடம் இருந்து இந்த கொடியநாசகாரி வந்ததா?

இவ்வாறு சில வினாக்கள் இருக்கின்றன. ஆனால் அவையாவற்றுக்கும் விடைதெரியாத மர்மநிலை தொடர்கின்றது.

இந்த உலகில் மூன்றாம் உலகப்போர் வெடித்தால் அந்தக்களத்தில் இரசாயன ஆயுதங்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்களின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும்.

ஏற்கெனவே இதற்கென சரின் ,விஎக்ஸ் ,நொவிசோக் ஆகிய கொடிய ரசாயனங்கள் அவற்றுக்குரிய சிறப்பு ஆய்வுகூடங்களில் நாசகாரமாக தூங்குகின்றன.

ஆனாலும் அவ்வப்போது எப்படியோ இவை வெளியே வந்துவிடுகின்றன.

1995 இல் ஜப்பானின் ரோக்கியோ தொடருந்து நிலையத்தில் சரின் வாயு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லபட்டு ஆறாயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கபட்டனர்.

அந்தத் தாக்குதலின் சூத்திரதாரியாக இருந்த அடிப்படை வாத மதகுருவுக்குக்கும் அவருடைய உதவியாளர்கள் ஆறுபேருக்கும் இன்றுதான் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபோல முன்னர் சதாம் குசைனும் 80 களில் குர்துகள் மீது சரின்வாயுவை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரை படுகொலைசெய்யப்பட்டதாக குற்றஞசாட்டப்பட்டது. கடந்த ஆண்டு மலேசிய விமானநிலையத்தில் வைத்து விஎக்ஸ் ரசாயனத்தால் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டார்.

சிரியப் போர்ககளத்திலும் சரின் வாயு தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டுகள் உண்டு.

அவ்வாறான ஒரு நிலையில்தான் பிரித்தானியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 இரசாயன பாதிப்பு சம்பவங்கள் திகிலூட்டுகின்றன.

பிரித்தானியாவில் பயன்படுத்தபட்ட இந்த நொவிசோக் ரசாயனத்துக்கென ஒரு வரலாறு உண்டு.

இது பனிப்போர்காலத்தில் ரஸ்யா உருவாக்கிய அதி கொடிய ரசாயன விஷம். இதற்கு ரஸ்யா வைத்த பெயர் ழேஎiஉhழம . ரஸ்ய மொழியில் நொவிசோக் என்;பதற்கு பெரிய இரசாயன அர்த்தங்கள் எதுவும் இல்லை மாறாக அதன் அர்த்தம் புதியவரவு (Newcomer) அவ்வளவுதான்.

இந்த நொவிசோக் கண்டுபிடிக்கப்பட முன்னர் பிரித்தானியா 1950 களில் கண்டுபிடித்த வெனமஸ் ஏஜன்ட் எக்ஸ் எநழெஅழரள யபநவெ ஓ எனப்படும் விஎக்ஸ் ரசாயனமே உலகின்; முன்னணிநாசகார ரசாயனமாக இருந்தது. இந்த வகை ரசாயனத்தை பயன்படுத்தித்தான் கடந்த ஆண்டு மலேசிய விமானநிலையத்தில் வைத்து வட கொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டார்.

அவரை கடந்து சென்றவர்கள் ஒரு கைக்குட்டையால் அவரது முகத்தை லேசாக தொட்டுவிட்டு சென்றார்கள். அவ்வளவுதான் முடிந்தது அவர் கதை.நொவிசோக் ஐ பொறுத்தவரை ரஸ்யா தனது இரகசிய ஆயுத செயற்திட்டங்களின் அடிப்படையில் விஎக்ஸை விட 10 மடங்கு அதிகவலுவில் இதனைக் கண்டுபிடித்தது.

நொவிசோக் ஒரு நான்காம் தலைமுறை நச்சுவாயு. திரவநிலையில் இருந்து சட்டென வாயுவாக மாறக்கூடியது. தொட்டால் முகர்ந்தால் அவ்வளவுதான் மரணத்தின் வாசல் சட்டென திறந்துகொள்ளும். இது நிறமற்றது. டிற்ரெக்ரேஸ் எனப்படும் தேடும் கருவிகளால் இந்த ரசாயனத்தை கண்டுபிடிக்க இயலாத வகையில் ரஸ்யர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

இதனால் இதற்குரிய ரசாயனங்கள் விமானநிலையங்கள் அல்லது துறைமுகங்கள் ஊடாக கடத்திச்செல்லப்பட்டால் கூட அதனை கண்டுபிடிப்பதற்குரிய எந்த ஒரு கருவிகளும் பிரித்தானியா உட்பட மேற்குலகில் இதுவரை இல்லை. இது பெரும் அபாயநிலை.

நொவிசோக் இரசாயனத்தை பொறுத்தவரை அதில் ஒரு முக்கிய விடயம் உண்டு இது தனித்தனியான இரண்டு ரசாயனங்கள் சேர்க்கபடும்போது உருவாகும் ஒரு கொடிய விசம். ஆனால் தனித்தனியாக இந்த இரண்டு ரசாயனங்களும் இருந்தால் அதனால் தீங்கு இல்லை.

அதாவது தனித்தனியாக இருந்தால் இந்த இரண்டு ரசாயனங்களும் சமர்த்துப்பிள்ளைகள் ஆனால் சேர்ந்துவிட்டால் உயிர்குடிக்கும் பெரும் நாகாரசங்காரி. இது உடலில் சிறியளவுபட்டால் அல்லது அதனை முகர்ந்தால் நரம்புமண்டலம் சீர்குலைக்கப்பட்டு மரணத்தின் வாசல் திறக்கப்படும்.

இப்போது பிரித்தானிய வீதிகளில் இவ்வாறான மரணவாசல்கள் திறக்கப்படுகின்றனவா என்பது தான் இப்போதுள்ள வினா!

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!