தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தண்ணி காட்டிய ஹக்கீம்!

50shares

கிழக்கு மாகாண முஸ்லீம்களின் காணிப் பிரச்சினை குறித்து பாராளுமன்ற குழு அறையில் அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது.

குறித்த கூட்டத்திற்கு தமிழ் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரியாமல் கிழக்கு விடயத்தை தனியாக கையாண்டதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தண்ணி காட்டியுள்ளார் என்றே கூறவேண்டும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சியினால் மட்டக்களப்பு காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான அவரச நடவடிக்கை என குறித்த சம்பவத்தை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடல் என்ற போர்வையில் கடந்த 06 ம் திகதி அந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமைதாங்கியதுடன் காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள்,

அட்டாளைச்சேனை பொது மக்கள் நலன்புரி சேவைகள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடு,

மற்றும் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மையவாடி காணிகளின் உரிமை தொடர்பான விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டு அது குறித்து நடவடிக்கை எடுக்க காணி அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மன்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கு உரித்துடைய, அதாவது 19717ஆம் ஆண்டு முதலாவது நில அளவையின்போது பதிவிலக்கம் பெற்றுக்கொண்ட உரிமையுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளினால் குறித்த காணிகளை வழங்க மறுக்கும் மக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, வேறு சில சமூகத்தவர்களுக்கு இவ்வாறு முஸ்லீம்களின் காணிகளை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது, இன பாரபட்ச முறை மட்டக்களப்பில் நிகழ்வதான கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

மன்முணை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை, நாவற்கேணி முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடமைப்புக்கான காணி 1897ஆம் ஆண்டு முதல் அனுபவித்துவருவதுடன் 1937ஆம் ஆண்டு மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஏல விற்பனையின்போது விலைக்கு வாங்கப்பட்ட 21 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காணியில் ஒரு பகுதியை அரச காணி எனக் குறிப்பிட்டு முஸ்லிம் தனிக்குடியிருப்பு பகுதியில் தமிழ் சமூகத்துக்கான மயானம் அமைக்கும் திட்டமொன்றை செயற்படுத்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இன முறுகளுக்கும் சமூக பாரபட்சத்துக்கும் வழியமைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக காணி அமைச்சரின் பணிப்புரையினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் காத்தான்குடி பிரதேசத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக காத்தான்குடி பள்ளிவாசலின் கட்டுப்பாட்டில் செயற்பட்டுவரும் மையவாடி காணிகளை குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்கு வழங்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எச். கருணா, பிரத்தியேக செயலாளர் எச். அபிருப்தரணி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் இதர அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அஹமட்லெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்?

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்பு குறித்து பேசினால் இனவாத முத்திரை குத்தும் முஸ்லீம் தலைவர்கள் தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் வாழும் காணிகள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்காது பிரச்சினைகளை ஆராய்ந்தமை எந்த வகையில் நியாயமானது.

இதனை என்ன வாதம் என்று சொல்வது.

ஒரு புறம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லிணக்கம் பேசிக்கொண்டு மறுபுறம் கிழக்கை தங்கள் வசப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயமானது.

முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் வாதிகள், செல்வந்தர்களால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் காணிகள் தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கின்ற போது அது குறித்தும் அதனை தீர்ப்பதற்கு கூட்டம் போடாத அமைச்சர் இதற்கு மட்டும் தனியாக கூட்டம் போட்டு பேசியது இனவாதம் இல்லையா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் சவுக்கடி, தளவாய், ஐயன்கேணி, குடியிருப்பு ,ஏறாவூர் பகுதிகளில் உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

யுத்த காலத்தில் முஸ்லீகளால் விற்பனை செய்யப்பட்ட வயல் காணிகளை மீள தருமாறு தமிழ் விவசாயிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை வீதியில் உள்ள பல ஏக்கர் காணிகளை தங்களுடைய காணி என முஸ்லீம் செல்வந்தர்கள் பலர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

புல்லுமலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை முஸ்லீம் அரசியல் வாதிகள் அடைத்து வைத்துள்ளனர்.

காலாகாலமாக ஆறுமுகத்தான் குடியிருப்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த மயான பூமிக்கு தற்போது முஸ்லீம்கள் உறுதி கொண்டுவருகின்ற நிலை உருவாகியுள்ளது.

இராணுவத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு பண்ணை செய்வதற்கு என்று கூறி பல ஏக்கர் காணிகளை அபகரிக்கு திட்டம் நடைபெறுகிறது.

இது போதாதென்று மகாவலி அபிவிருத்தி திட்டம், வனபரிபாலன பகுதி, வனஜீவராசிகள் பகுதி என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான காணிகள் அபகரிக்ப்பட்டு வருகின்றன.

இது போதாதென்று சீன அரசாங்கத்தின் அபிவிருத்திக்கு என்று பல ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

வேடிக்கை பார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

இவ்வாறு கிழக்கில் திட்டமிட்டு தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்படும்போது அது குறித்து எந்த வித அக்கறையும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்ப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை தவிர காணி பிரச்சினைகள் குறித்து வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை என பொது மக்கள் குறை கூறியுள்ளனர்.

ஏனையவர்கள் நல்லிணக்க கெட்டுவிடும் என்று இது போன்ற காணி பிரச்சினைகளை கண்டும் காணாது விட்டுவிடுகின்றனர்.

அதாவது தற்போது கிழக்கில் மட்டக்களப்பில் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் அதை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கை கைப்பற்ற நினைக்கும் அமைச்சர் ஹக்கீம், ஹிஸ்புல்லா போன்றவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டமே தற்போதைக்கு சவாலாக உள்ள நிலையில் அதனை குறிவைத்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு தாரைவார்த்து கெடுத்து விட்டதை போல் எதையும் கண்டுகொள்ளாது இருக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!