கறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் எஸ்.எம்.ஜியும்! உளவாளி சேவியரும்!!

  • Prem
  • July 18, 2018
366shares

மீசாலை-கச்சாய் வீதியிலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா படையினருக்கு அன்று தகவல் வழங்கியவர் சேவியர் என்ற குறியீட்டுப்பெயருக்குரிய உளவாளி.

அப்போது குருநகர் படைமுகாமில் செயற்பட்ட சிறிலங்கா புலனாய்வு மையம் பெடியள் குறித்த தகவல்களைபெற இந்த சேவியர் மிக முக்கியமானவராக இருந்தார்.

1982ஆம் ஆண்டில் வடமராட்சி திக்கம்பகுதியில் மது போதையில் படையினரிடம் சிக்கிய ஒரு இளைஞரே இவ்வாறு சேவியர் என உருமாற்றப்பட்டார்.

சேவியர் என்ற குறியீட்டுபெயருக்குரிய இந்த இளைஞருக்கு சில ஆரம்பகால விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பழகிவந்தவர்.

எனினும்; ஒருகட்டத்தில் இவரிடம் அதிக மதுபோதைப்பழக்கம் ஒட்டிக்கொண்டதால் இவருடனான தொடர்பை புலிகளின் குடும்ப உறுப்பினர்கள் துண்டித்துவிட்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் தம்மிடம் சிக்கிய சேவியருக்கு மேலும் போத்தல்களை வழங்கிய புலனாய்வாளர்கள் புலிகள் குறித்த சில தகவல்களை பெற்றிருந்தனர்.

மீசாலை தென்னந்தோட்டம் ஒன்றில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதான தகவலும் அவ்வாறாக பெறப்பட்ட ஒரு தகவலே.

சேவியர் வழங்கிய தகவலை இல் நம்பியே சரத்முனசிங்கா குழுவின் தேடுதல் வேட்டை மீசாலையில் (83 யூலை 15 ) இடம் பெற்றிருந்தது.

ஆனால் அதற்காக நடத்தபட்டதேடுதலில் அவ்வாறான முகாம் எதுவும் அகப்படவில்லை. ஏமாற்றமடைந்த சரத்முனசிங்க குழு மீண்டும் குருநகருக்கு திரும்பியபோதே கொண்டாமூலைப்பகுதியில் ஒரு முக்கிய சம்பவம் இடம்பெற்றது.

அந்தவழியால் இரண்டு சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த இளைஞர்களை கண்;ட சரத்முனசிங்கா தனது படையினரை உசார்ப்படுத்த இளைஞர்களும் அதற்கான பதிலடியை துப்பாக்கி வேட்டுக்களால் மீசாலைப்பகுதி அதிர்ந்தது

இந்த 3 இளைஞர்களும் வேறு யாருமல்ல,சிறிலங்கா படைத்தரப்பு அன்றையகாலத்தில் மும்முரமாக குறிவைத்து தேடிக்கொண்டிருந்த சீலன், ஆனந்தன், மற்றும் அருணா ஆகிய போராளிகள்.

அருணா ஓடிய சைக்கிளின் முன்பகுதியில் சீலன் தனக்கு பிரியமான எஸ்.எம் ஜி எனப்படும் உப இயந்திரத் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார். மற்றைய சைக்கிளில் ஆனந்தன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை சரத் முனசிங்கா குழு இடைமறிக்க முயன்றதால் தான் துப்பாக்கிச்சமர் வெடித்தது. இந்த துப்பாக்கிச்சமரில் சில துன்பியல் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.

படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஆனந்தன் அந்த இடத்திலேயே விழுந்து மரணமடைந்தார்.

ஆனந்தன் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் சீலனும் அருணாவும் ஓடிக்கொண்டிருந்தனர். படையினர் வேட்டுக்களைத் தீhத்துக்கொண்டு பின்னால் ஓடிவந்தனர்.


அப்போது திடிரென சீலனும் நிலத்தில் விழுந்தார். படையினரின் எந்த ஒருவேட்டும் அவரை தாக்கியிருக்காத நிலையில் சீலன்நிலத்தில் விழுந்ததில் ஒரு துன்பியல் காரணம் இருந்தது.

இந்தசம்பவம் இடம்பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதாவது 82 ஒக்டோபரில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதலை முன்னின்று நடத்தியவர் சீலன்

அந்தத்தாக்குதலில் சீலனின் முழங்கால்பகுதிக்கு அருகே துப்பாக்கிசூட்டு காயம் ஏற்பட்டது.

அந்தக்காயம் ஓரளவு குணமாகியிருந்த போதும் இப்போது படையினரிடமிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியபோது திடிரென அந்த காயம் மீண்டும் அழற்சிக்கு உள்ளானது. இதனால் வேகமாக ஒட முடியாமல் சீலன் தடுமாறி கீழே விழுந்தார்.

சீலன் இவ்வாறு திடிரென விழுந்ததும் சீலனின் சிறுவயது நண்பனும் சக போராளியுமான அருணாவுக்கு பதற்றம் ஏற்பட்டது.

ஆனந்தனும் வீரச்சாவை தழுவிய நிலையில் சீலனும் விழுந்தால் அருணாவுக்கு இக்கட்டான நிலையொன்று ஏற்பட்டது.

சீலனின் தோளைப்பிடித்து உலுப்பிய அருணா இன்னும் கொஞ்சத்தூரம் போனால் தப்பிக்கலாம் என்பதால் எழும்பி சற்று ஒடுமாறு கெஞ்சினார். படையினரின் வேட்டுக்களும் பாய்ந்து கொண்டிருந்தன.

ஆனால் தன்னால் மேலும் ஓட முடியாதென குறிப்பிட்ட சீலன் முழங்கால்காயம் ஏற்படுத்திய அழற்சியின் வலியால் துடித்தார்.

அருணா அடுத்தகட்ட நகர்வுக்கு முயற்சித்தார் அருணா சீலனை இழுத்துக் கொண்டு ஓட முயற்சித்தார் ஆனாலும் இயலவில்லை.

படையினரும் நெருங்கி வந்தனர். அடுத்து நடக்கப் போவதை சீலன் ஊகித்திருக்க கூடும்.

ஆனால் அவரது கரங்களில் இயக்கத்தின் முக்கிய சொத்தான எஸ்.எம் ஜி இருந்தது

அந்த வலியிலும் இயக்க ஆயுதத்தின் எதிர்காலம் குறித்து அவரது முளையில் பொறிதட்டியிருக்க வேண்டும்….

இதனால் சீலனின் சிறுவயது நண்பனான அருணாவே எதிர்பாராத ஒரு வார்த்தை சீலனின் வாயிலிருந்து வந்தது. அந்த வார்த்தை…

தடங்கள் தொடரும்….

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்