இலங்கையில் சீனாவின் கை ஓங்க றோவின் அனுகுமுறையே காரணம்?

39shares

பிரதமர் இந்திராகாந்திக்கு பின்னர் இலங்கை விவகாரத்தில் ரா ஐபி உள்ளிட்டவற்றின் அதிகாரிகளே பிரதான பாத்திரங்களை வகித்தனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை பலத்த சரிவை சந்தித்தது.

அப்போது வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக பிரதமர் இந்திராதான் இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியுறவுக் கொள்கையை அதிகாரிகள் தீர்மானிக்கும் நிலை உருவானது.

இந்தியாவின் பிடி தளர்ந்தது இலங்கை விவகாரத்தில் ரா ஐபி உள்ளிட்டவற்றின் அதிகாரிகளே பிரதான பாத்திரங்களை வகித்தனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை பலத்த சரிவை சந்தித்தது.

குறிப்பாக இலங்கையில் இந்தியாவின் பிடி தளர்ந்து சீனாவின் கை ஓங்கியது. தெற்கே சீனா வடகிழக்கில் இந்தியா மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு முற்று முழுதாக இலங்கையின் தென்பகுதி தாரைவார்க்கப்பட்டது.

தற்போது இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் சீன அரசு கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. சீன நிறுவனங்களுக்கு தமிழர்களின் நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தாரைவார்த்துக் கொடுக்க இலங்கை அரசு இணக்கம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வீட்டுத்திட்டங்கள் தொழிற்சாலைகள் வீதிகள் என பல அபிவிருத்தித் திட்டங்களையும் சீன நிறுவனங்கள் செய்வதற்கு முன்வந்துள்ளன.

ஆனால் தமிழர்களின் நலனில் அக்கரை உள்ளதாக கூறும் இந்திய அரசு வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த அபிவிருத்தி திட்டங்களையும் செய்ததாக தெரியவில்லை.

இஸ்லாமிய மதத்தவருக்கு சவுதி ஈரான் அரசுகள் செய்வதைப் போன்று இந்திய அரசு தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை என்பதே உண்மை.

வடகிழக்கில் உள்ள தமிழர் பகுதிகளையும் இஸ்லாமியர்களின் பகுதிகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இதற்கான உண்மை புரியும். இந்தியா தமிழ் மக்களுக்கு எந்த அளவிலான அபிவிருத்திகளை செய்துள்ளது என்று.

இன்நிலையில் சீனாவின் வருகைக்கு காரணம் இந்திய புலனாய்வு அமைப்பின் றோ அதிகாரிகள் என்பதையும் அவர்கள் தமிழர்கள் குறித்து இந்திய அரசுக்கு விதைத்த ஐயப்பாடுகளே வடகிழக்கு இன்று சீனாவின் பிடிக்குள் போக காரணம் என சொல்லப்படுகிறது.

இது குறித்து இந்திய ஊடகங்கள் இவ்வாறு கூறியுள்ளன.

இலங்கையில் இந்தியாவின் கை திடீரென ஓங்கியிருப்பது சிங்கள தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக மத்தல விமான நிலைய பராமரிப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பது ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைவிட மோசமானது என விமல் வீரவன்ச போன்றோர் சாடியுள்ளனர்.

அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நெடுங்கால போராட்டம். இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த வரை இலங்கை அடங்கித்தான் இருந்தது.

அப்போது வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக பிரதமர் இந்திராதான் இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியுறவுக் கொள்கையை அதிகாரிகள் தீர்மானிக்கும் நிலை உருவானது.

இந்தியாவின் பிடி தளர்ந்தது இலங்கை விவகாரத்தில் ரா, ஐபி உள்ளிட்டவற்றின் அதிகாரிகளே பிரதான பாத்திரங்களை வகித்தனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை பலத்த சரிவை சந்தித்தது.

குறிப்பாக இலங்கையில் இந்தியாவின் பிடி தளர்ந்து சீனாவின் கை ஓங்கியது. தெற்கே சீனா வடகிழக்கில் இந்தியா மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு முற்று முழுதாக இலங்கையின் தென்பகுதி தாரைவார்க்கப்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையின் தென்பகுதியில் சீனாவும் வடகிழக்கில் இந்தியாவும் என்கிற நிலைமை ஏற்பட்டது. வடகிழக்கில் சீனா நிறுவனம் சீனா நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தால் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் வெளிநாட்டவர் குடியேற்றம் அதிகரிக்கும் என கவலை தெரிவித்தது இந்தியா. ஆனால் இலங்கை அரசோ, நிறுவனம்தான் சீனா; அதில் 3,000 தமிழர்கள்தான் பணியாற்றுவர், அதேபோல் சீனா மேலும் 2 தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது. அதில் 2,000 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என விளக்கம் அளித்தது. வெளியுறவுத் துறை செயலர் பயணம் இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே அண்மையில் கொழும்பு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் இந்தியா செயல்படுத்த இருக்கும் 16 திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார்.

அதிர்ச்சியில் சிங்கள தலைவர்கள் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்ட அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தல விமான நிலைய பராமரிப்பை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இறுதி ஆலோசனை இதில் மிகவும் முக்கியமானதாகும். மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்திய அதிகாரிகளும் அண்மையில் இலங்கை சென்று ஆய்வு நடத்தி இருந்தனர்.

சீனாவையும் இந்தியாவையும் சமாதானப்படுத்தும் வகையில்தான் இலங்கை அரசு இப்படியான ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்பது அந்நாட்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் சிங்கள இனவாதியான விமல் வீரவன்ச நேற்று வெளியிட்ட அறிக்கையிலோ, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு தருவது என்பது ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைவிட மோசமானது. திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா நுழைவதற்கு இது வழிவகுக்கும் என அதிர்ச்சி தெரிவித்துள்ளளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!