கறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது? அருணாவின் கலக்கம்

  • Prem
  • July 19, 2018
607shares

சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென அழற்சியுற்றதால் தொடர்ந்தும் ஒட முடியாமல் அவர் கீழே விழுந்தார். ஆயினும் கூட ஓடிவந்த அருணா சீலனை இழுத்துக் கொண்ட ஓட முயற்சித்தார். ஆனால் அது முடியவில்லை.

பின்னால் துரத்திக்கொண்டு வரும் படையினரும் நெருங்கி விட்டனர். இனிஎன்ன செய்வது?

தனது கரங்களில் இருந்த எஸ்.எம்.ஜி ஆயுதம் குறித்தே சீலனின் சிந்தனை ஓடியது.

தனக்கு முன்னால் பதற்றத்துடனும் உணர்வு நிலையுடனும் போராடிக்கொண்டிருந்த அருணாவின் கண்களை சில கணங்கள் உறுதியாகப் பார்த்தார் சீலன்.

உள்ளத்தில் எடுத்த முடிவு உதட்டில் வந்தது.தன்னை சுட்டுகொன்று விட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி அருணாவிடம் குறிப்பிட்டார்.

அவர்கள் எனது ஆயுதத்தைக் கைப்பற்றக்கூடாது… கைப்பற்றவும் முடியாது… என்னை அவர்கள் உயிருடன் பிடிக்கவும் கூடாது. உறுதியுடன் சொன்னார் சீலன்.

சீலனின் வாயிலிருந்து இவ்வாறு வார்த்தைகள் வருமென்பதை அருணா சற்றுமே எதிர்பார்க்கவில்லை. வார்த்தைகளைக்கேட்டு இன்னும் அதிர்ச்சியானார்.

ஆயினும் சீலன் கூறியதை காதில் வாங்காதவரை போலகாட்டிக்கொண்டு அவரை இழுத்துக் கொண்டு ஓட முயற்சித்தார்.

படையினரின் வேட்டுகளும் மேலும் மேலும் அதிகமாக சீறிக்கொண்டு அருகே பாய்ந்தன. அவர்கள் நெருங்கிவந்து விட்டது இருவருக்குமே புரிந்தது.

தாக் சொன்னதை காதில் வாங்காததை போல நடித்த அருணாவின் தயக்கத்தை கண்ட சீலனுக்கு கோபம் வந்தது.

எனினும் தன்னுடன் சிறுவயது முதலே பழகிய நண்பனான அருணாவின் மனப்போராட்டத்தையும் அவர் கணித்திருக்;க கூடும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தாக்குதல்தளபதி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு தன்னை சுட்டுக்கொல்வதை ஒரு உத்தரவாக பிறப்பிப்பதாக கட்டளையிட்டார் சீலன்.

சிறுவயது நண்பனும் இயக்கத்தின் சக தோழனுமான சீலன் தன்னிடமே

அவரை சுட்டுக்கொல்லும் படி இயக்கத்தின் தாக்குதல்தளபதி என்ற பொறுப்பில உத்தரவு ஒன்றைப் பிறப்பித்ததை அருணாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவரது விழிகளிலிருந்து நீர் ஆறாகப்பெருகி வழிந்தது.

அருணா தனக்கு முன்னால் நின்று அழுவதை கண்ட சீலன் உடனே சுடு…சுடு என துரிதப்படுத்தினார். இது தனது இறுதி உத்தரவு என்றார்.

விழிகளிலிருந்து நீர் ஆறாகப் பெருகி கண்களை மறைக்க துப்பாக்கியை எடுத்த அருணா அதனை சீலனின் நெற்றிப்பொட்டில் வைத்தார்.

ஆயினும் எண்ணவோட்டம் மின்சாரமாக தாக்கியது.

தான் சுட்டுக்கொல்லப் போவது யாரை?

விடுதலைப்புலிகள் அமைப்பில்; தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து உள்ள இரண்டாம் நிலைத்தலைவர்.

அது மட்டுமல்ல இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதியும் அவரே.

இதற்க்கும் அப்பால் தனது சிறுவயது நண்பன் சீலன்.

இவையெல்லாவற்றையும் விட சீலனின் மரணத்தை எவ்வாறு தலைவரின் முகத்தைப் பார்த்துக் கூறுவது?

என பல காரணங்கள் அருணாவின் நெஞ்சை இறுக்கின

விழிநீர் ஆறாகப்பெருகியோடிய தனது கண்களின் ஊடாக சீலனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி துப்பாக்கியின் விசையை அழுத்தினார்.

எதிரிகளிடம் உயிருடன்; சிக்குவதில்லை என்ற கொள்கைக்குரிய மறவன் சரிந்து விழுந்தான்.

இதயச்சந்திரன், ஆசீர், சீலன், சாள்ஸ்அன்ரனி ஆகிய பெயர்கள் ஒரேபுள்ளியில் சரித்திரமாகின.

தமிழீழ விடுதலைப்போராட்டமும் மிக வித்தியாசமான பரிமாணத்தில் ஒரு வரலாற்று மரணத்தை சந்தித்தது.

ஆனால் அருணாவுக்கும் நேரமில்லை.

படையினரோ நெருங்கிவிட்டனர். அவருக்கும் இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.

வேறுவழியில்லை ஆகக்குறைந்தது சீலனின் இறுதி விருப்பப்படி எஸ்.எம் ஜி ஆயுதத்தையாவது காக்கவேண்டும்.

எஸ்.எம் ஜி எடுத்துக்கொண்டு படையினரின் ரவைகளுக்கு ஊடாக மின்னலென பாய்ந்தோடினார் அருணா.

ஆயினும் அவரையும் படையினரின் ரவைகள் விட்டுவிடத்தயாராக இல்லை. அவரது கையை தாக்கியது துப்பாக்கி ரவையொன்று.

அருணாவும் திடீரென கீழே விழுந்தார்.

அடுத்து என்ன?

தடங்கள் தொடரும்….

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!