கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

  • Prem
  • July 20, 2018
652shares

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனித்துவமாக பதிந்த பெயர்களில் சீலன் எனப்படும் சாள்ஸ் லூக்காஸ் அன்ரனிக்கு அழிக்கமுடியாத ஒரு வகிபாகம் உண்டு.

இதுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சீலன் மீது கொண்டிருந்த அன்புக்கு அவரது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி என பெயர்சூட்டியமை அவரது பெயரில் ஒரு படையணியை கட்டியமைத்தது போன்ற நகர்வுகளுக்கு சீலனின் மரணம் நிகழ்ந்த முறையும் முக்கிய காரணமாகும்.

மிக உறுதியான மனதுடன் தனது தோழனிடமே தன்னை சுட்டுக்கொல்லும் படி முதலில் கோரிக்கை விடுத்து அவ்வாறு செய்யத்தயங்கிய தோழனுக்கு அதனையே தனது தளபதி பொறுப்பில் ஒரு உத்தரவாகப் பிறப்பித்து அதன்மூலமாக ஒரு தோட்டாவை உறுதியுடன் ஏற்றவர் சீலன்.

திருமலை தேவாலய வீதியில் ஒரு ஏழ்மையான கத்தோலிக்கக் குடும்பமொன்றில் உதித்த சீலனின் விடுதலைப்பயணததின் துடிப்பு மீசாலையில் அடங்கியது.

சீலனின் துடிப்பு அடங்கியபின்னர் அவரதுஇறுதி விருப்பப்படியே அவரிடமிருந்த எஸ்.எம்.ஜி எடுத்துக்கொண்டு அருணா ஓடினார்.

அப்போது படையினர் சுட்ட ரவைகளில் ஒன்று அவரது கையை தாக்கியதால் படுகாயமடைந்து அவரும் கீழே விழுந்தார்.

படையினரும் நெருங்கிகொண்டிருந்தனர். அருணாவின் இறுதிக்கட்ட முயற்சி ஒரு உறுதியாக மாறியது. படுகாயமடைந்த கையுடன் ஒருவாறு எழுந்தவர் மறுகையால் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு முழுஉத்வேகத்துடன் கிராமங்களுக்கு ஊடாக ஒடினார்.

அருணாவுக்கு தனது கரத்தில் ஏற்பட்ட படுகாயத்தின் வலியை விட

தனது கைகளால் சீலன் மரணித்த விடயத்தை எவ்வாறு தலைவரின் முகத்தை பார்த்துக்கூறுவது என்ற மனவலியே பெரிதாக இருந்தது.

இப்போதுதான் சங்கரின் இழப்பில் இருந்து தலைவர் பிரபாகரன் ஓரளவு மீண்டுவருகின்றார். இந்தநிலையில் இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதியும் மரணமடைந்த செய்தியை எவ்வாறு கூறுவது என்பதே அவருக்குப் போராட்டமாக இருந்தது.

மீசாலையின் கிராமங்களுக்கு ஊடாக உதிரம் வழிந்த கரத்துடன் ஒடிய அருணா சாவகச்சேரிப்பகுதியில் ஒரு வாகனத்தை வழிமறித்து அதனை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி வரை சென்றார். பின்னர் அங்கு அதனை கைவிட்டுவிட்டு ஒரு மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு நீர்வேலியிலுள்ள தமது முக்கியமான முகாமுக்கு சென்றார்.

அப்போது அந்த முகாமில் தலைவர் பிரபாகரனுடன் கிட்டுவும் பண்டிதரும் இருந்தனர். மீசாலை சம்பவத்தை இன்னமும் அவர்கள் அறியவில்லை.


இயக்கத்தின் நிதித்தேவைகள் குறித்து பிரபாகரன் கிட்டுவுடனும்; பண்டிதருடனும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.

அந்தவேளை காயமடைந்தநிலையில் மிகவேகமாக உள்ளே நுழைந்த அருணாவை கண்டவர்களுக்கு அதிர்ச்சி. நடந்த சம்பவத்தை அருணா விபரித்ததும் இன்னும் பெரும் அதிர்ச்சி.

அருணா கூறிய துன்பியல் செய்தியை கேட்டதும் பிரபாகரனின் முகம் இறுக்கமாக மாறியது. எந்தநிலையிலும் விம்மி வெடிக்ககூடிய ஒரு சோகம் அவரது முகத்தை அப்பிக்கொண்டது

நீண்டநேரமாக அவர் எதுவுமே பேசவில்லை. பண்டிதரும் கிட்டுவும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர். இனி சீலன் இல்லை! இது தலைவர் பிரபாகரனுக்கு பெரும்வேதனையை வழங்கியது.

சீலனின் இழப்பு விடுதலைப்புலிகளிடம் இவ்வாறு ஒரு துன்பியல் அதிர்வை ஏற்படுத்த மறுபுறத்தே வானொலி தொடர்பாடல் ஊடாக சரத்முனசிங்காவினால் குருநகர் முகாமுக்கு அனுப்பட்ட இந்த செய்தி அங்கு பெரும் குதூகல நிலையை உருவாக்கியது.

மீசாலையில் இரண்டு புலிகள் தமது தாக்குதலில் கொல்லபட்டதாக

நினைத்த படைத்தரப்புக்கு கொல்லப்பட்டவர்கள் யார் யார் என்பது தெரியவில்லை.

அத்துடன் சீலன் சகபோராளியினால் சுட்டுக்கொல்லப்பட்டதை அறியாத சரத்முனசிங்கா அவரும் தமதுதரப்பின் தாக்குதலில்தான் கொல்லப்பட்டதாக கருதினார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் மேலதிகதேடுதலை நடாத்த விரும்பிய சரத்முனசிங்க உடனடியாக குருநகர் முகாமுக்கு இதனை அறிவித்தது படை உதவி;க்காக காத்துநின்றார்.

அவர் கோரியது போலவே மேஜர் அசோக ஜெயவர்த்தனா தலைமையில் குருநகரிலிருந்து புறப்பட்ட விசேட அணியொன்று மீசாலைக்கு விரைந்து சென்று தேடுதல் நடாத்தியது.

இதன்பின்னர் கொல்லப்பட்டவர்கள்; யார் என்ற அடையாளம் தெரியாமலே இரண்டு உடலங்களையும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பிவைத்தது.

கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களின் உடலங்களை யாரைக்கொண்டு அடையாளம் காண்பது என்பது சரத்முனசிங்கவுக்கு புதிய சிக்கலாகியது

இதற்கு சேவியர்தான் சரியான ஆளெனநினைத்தார். சேவியரை வரவழைத்தார் அவர். மீசாலை தென்னந்தோட்டம்; ஒன்றில் புலிகளின் மறைவிடம் இருப்பதாக தமக்கு தகவல் வழங்கிய சேவியருக்கு அந்த இடத்தில் கொல்லப்பட்ட புலிகளை தெரியக்கூடும் என்பது அவரது கணிப்பு

அவரது கணிப்பு வீண்போகவில்லை. பிரேதஅறையில் சீலன் மற்றும் ஆனந்தனின் உடலங்களை பார்த்தார் சேவியர்.

அதில் ஒரு உடலத்தின் காலில் துப்பாக்கிச்சூட்டுதழும்புகளை கண்டுவிட்டார் அவர்.

இந்ததழும்புகள் சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தாக்குதலில் துப்பாக்கி சூடுபட்டகாயத்தின் அடையாளமாக இருக்கலாம். முகத்திலோ சீலனின் சாயல். சந்தேகம் இல்லை இது சீலன்தான். சேவியரின் உதடுகள் பெரிதான அசைந்தன

இது ….சீலன்! சேவியர் சொன்ன தகவலைக்கேட்டதும் சரத் முனசிங்காவுக்கும் அருகில் நின்ற பிரிகேடியர் பல்தசாருக்கும் அதனை நம்பவேமுடியவில்லை.

பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த சீலனாவது இலேசில் சிக்குவதாவது?

சேவியரை ஏளனமாக பார்த்தனர். அவநம்பிக்கை மேலோங்கி குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பத்துக்கு முடிவு கட்டவிரும்பிய சரத்முனசிங்க வேறு ஒரு முடிவு எடுத்தார்.

அந்த முடிவு …..

தடங்கள் தொடரும்….

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!