விஜயகலா மகேஸ்வரன் தென்னிலங்கையின் அரசியல் நாடகமா?

115shares

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப்புலிகள் குறித்த பேச்சுக்கள் மற்றும் அதன் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் சிங்கள மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் இருந்த புலி ஆதரவுக் கொள்கைகள் பற்றிய தோற்றப்பாட்டை இல்லாதொழிப்பதற்கான தந்திரஉபாய செயற்பாடுகளா என எண்ணத் தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை சிங்கள மக்கள் மத்தியில் பெருக்கிக்கொள்ள விஜயகலா மகேஸ்வரனை ஐக்கிய தேசியக் கட்சி பலிக்கடாவாக்கியதா? என்ற சந்தேகங்கள் மேலெழுந்துள்ளது.

விஜய கலாவிற்கு முன்னர் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் குறித்தும் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பல பேச்சுக்களை மேடைகளில் பேசியுள்ளனர். அதை விட பௌத்த மதத்தை சேர்ந்த பிக்குகள் பலர் அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டில் வன்முறையை தூண்டும் வகையிலும் பல இடங்களிள் பேசியுள்ளனர். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் விஜயகலா மீது மட்டும் அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?

அவர் ஒரு தமிழர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தொன்னிலங்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற காரணத்தினாலா?

தென்னிலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப்புலிகள் ஆதரவாக செயற்படுகிறது நாட்டை தமிழர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கப்போகின்றது என்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்துவதற்காகவா? விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த செயற்பாட்டின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தென்னிலங்கைக்கு ஒரு முகத்தையும் வடக்கிற்கு இன்னுமொரு முகத்தையும் காட்டியுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

விஜயகலாவையும் அவருக்கு ஊடாக வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள ஆதரவு தளத்தையும் இழப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார். விஜயகலா மீதான சர்ச்சைகள் வெகு விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவருக்கான அமைச்சுப்பதவி மேலும் பல சலுகைகளுடன் வழங்கப்படவே அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

ஏனெனில் அதற்கான சமிஞைகள் அண்மையில் வடக்கில் நடந்த நிகழ்வில் தெரிய ஆரம்பித்துள்ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­ல் பதவி பிடுங்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்­கில் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டு ஒரு அமைச்சருக்கான மதிப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்து தெற்­கில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைப்­பீ­டம் அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைப் பறித்­தது. அத்­து­டன் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ரமே அவர் பதவி வகிக்­கின்­றார்.

இன்நிலையில் வடக்கிற்கு வந்த பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கில் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இல்­லாத சிறப்­பு­ரி­மை­யாக முன்­வ­ரிசை ஆச­னம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­பட்டீருந்ததை காணக்கூடியதாக இருந்தது

அது மட்டுமல்ல அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டாலும் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஒரு அமைச்சர் போன்றே செயற்பட்டதாக வடக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் தென்னிலங்கை மக்களையும் இனவாத அரசியல் வாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காகவே விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை ஐக்கிய தேசியக் கட்சி தலைமை பலிக்கடாவாக பயன்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!