கனடா பிரதமரிடம் மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை!

  • Shan
  • June 13, 2018
267shares

அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டே நவரோ, கனடா பிரதமர் தொடர்பில் வெளியிட்ட விமர்சினங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பீட்டெ நவரோ, அண்மையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சினங்களை முன்வைத்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, 'நரகத்தில் சிறப்பு இடம் கிடைக்கும் என நவரோ கூறியிருந்தார்.

உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் தெரிவித்தமைக்கே நவரோ இவ்வாறு விமர்சினத்தை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் இது தொடர்பில் மன்னிப்பினை கோரியுள்ளார்.

இதேவேளை, நவரோவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!