மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு

229shares

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழதுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆரையம்பதியை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரின் மகளே டெங்கு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கற்றுவரும் குறித்த மாணவி அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 08 ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்று உயர்கல்வி பெறுவதற்கான தகுதியை பெற்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாணவி டெங்கின் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த மரணம் தொடர்பிலான அறிக்கை கிடைத்த பின்னரே அது தொடர்பில் கூறமுடியும் என குறிப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!