கனகபுர வீதி வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது; ரஜினிகாந்!

3shares
Image

கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது என பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர் தா.ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையினால் மேற்குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ள வர்த்தகர்களை மேலும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வியாபாரிகளில் பலர் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் வியாபார நிலையங்களை அமைக்கும் போது பிரதேச சபையும் இருந்தது எனவே அப்போது அமைதியாக இருந்துவிட்டு. இப்போது அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை எமது வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!