மே-18 நிகழ்விற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் உயிர் தப்பிய மக்களை கண்டுகொள்வதில்லை!

3shares
Image

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வை நடத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூரத்திலிருந்து உயிர் தப்பி வாழ்வாதார உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசனம் வெளியிட்டுள்ளார்.

இறுதி கட்ட போரில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் போரில் இருந்து மீண்டு வந்த மக்களுடைய கதைகள் அவர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய முள்ளிவாய்க்கால் பதிவுகள் எனும் நூல் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிறுவனத்தால் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பதிவுகள் என்ற நூல் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு யாழ்.பொது நூலகத்தில் அடையாளம் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தர்சா ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் இருந்து உயிருடன் மீண்டுவந்த மக்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இவ்வாறான நூலொன்று வெளியிட்டு வைப்பதற்கான காரணத்தை அடையாளம் அமைப்பின் பிரதிநிதி தெளிவுபடுத்தினார்.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகந்தினி தெய்வேந்திரம் இவ்வாறான நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து அங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் உதயராசா சாளின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நடைபெற்றுவரும் அரசியல் போட்டி குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார். அது மாத்திரமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வை நடத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூரத்திலிருந்து உயிர் தப்பி எந்தவித வாழ்வாதார உதவிகளும் இன்றி உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!