லசந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றவாளிகளுக்கு இன்று கல்கிஸ்ஸ நீதவானின் உத்தரவு!

24shares
Image

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மூத்த பொலிஸ் மா அதிபர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலப் பகுதியில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் செயற்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணையில் முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கு உடந்தையாக இருந்ததுடன், உதவியிருந்தார் எனவும் பிரசன்ன நாணயக்காரவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் உதவி பொலிஸ் இன்பெக்டர் திஸ்ஸ சுகதபால கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த இருவருக்கும் எதிரான வழக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களான பிரசன்ன நாணயக்காரவிற்கும் திஸ்ஸ சுகதபாலவிற்கும் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அத்திட்டியப் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த கொலை தொடர்பான விசாரணைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முடக்கப்பட்டிருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் அதன் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!