வித்தியா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்!

23shares
Image

வித்தியா கொலை வழக்கில் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது மேலதிக அறிக்கை ஒன்றை ஊர்காவற்றுறை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

வித்தியா படுகொலை வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் முதலாவது சந்தேகநபராக பூபாலசிங்கம் இந்திரகுமார் 2015ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

எனினும் வித்தியா கொலை வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் இந்திரகுமார் நிரபராதி என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட போதிலும் அன்றைய தினத்திலிருந்து சுமார் 10 மாதங்களாக இந்திரகுமார் மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரால் அச்சுறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் வித்தியா படுகொலை வழக்கில் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சாட்சியாக இணைக்கப்படவில்லை.

எனவே சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்திருக்கவேண்டிய தேவை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குக் கிடையாது என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

பொலிஸார் - சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இந்த இழுத்தடிப்பால் அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரமின்றி நாளாந்த உணவுக்கே வசதியற்றவர்களாக உள்ளனர் எனவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் விசாரணையை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துடன், அதுவரை சந்தேகநபருக்கான விளக்கமறியல் உத்தரவையும் நீடிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!