ஸ்ரீலங்காவிலிருந்து சீனாவிற்கு நாணயத் தாள்கள் கடத்தல்!

13shares
Image

ஸ்ரீலங்காவிலிருந்து சீனாவிற்கு நாணயத் தாள்களை கடத்த முயற்சித்த வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனாவிற்கு கடத்த முயற்சித்த போது விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து அமெரிக்க டொலர், ஹொங்கொங் டொலர், இந்திய ரூபா மற்றும் ஸ்ரீலங்கா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணயத் தாள்களின் பெறுமதி ஒரு கோடியே 77 இலட்சத்து 13 ஆயிரத்து 793 ரூபா என சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 43 மற்றும் 32 வயதுடைய, அக்குரணை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளா​ர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!